Top
undefined
Begin typing your search above and press return to search.

மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க சதித்திட்டம்! அம்பலப்படுத்தியது உளவுத்துறை!

மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க சதித்திட்டம்! அம்பலப்படுத்தியது உளவுத்துறை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Dec 2019 8:56 AM GMT


நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் போன்ற அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகைசெய்கிறது.


இந்த சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவான விஷயம். இருந்தாலும் இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது போன்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இதுபோல, பாகிஸ்தானிய முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இவர்கள் இந்தியா முழுவதும் வன்முறையை தூண்டி குளிர்காய முயற்சிக்கின்றனர். இதற்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். குறிப்பாக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம், சென்னையிலுள்ள புதுக்கல்லூரி உள்பட நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் பயிலும் அப்பாவி மாணவர்களை மத உணர்வை தூண்டி போராட்டக் களத்தில் இறங்கி வருகின்றனர். அவர்கள் பஸ் எரிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையே தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றுவதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் திட்டமிட்டுள்ளன.


இதற்காக இங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை தூண்டி விட்டு வருகின்றனர். அதில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய கலவரங்கள் மூளாத காரணத்தினால், வரும் 23-ஆம் தேதி மிகப்பெரிய கலவரத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.


இதுவரை தமிழகத்தில் நடந்த முக்கிய பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை முன்னிலைப்படுத்தி நடந்த போராட்டத்தின்போது ஜாதி, மதம் தாண்டி அனைவரும் பங்கேற்று நாடறியும். ஆனால் இப்போது தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை, முஸ்லிம்கள் மட்டுமே ஆதரிக்கின்றனர். அவர்களும் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் இதில் கலந்து கொள்கின்றனர்.


கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்களை முஸ்லிம் மாணவர் அமைப்புகளும், கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளும் முன்னின்று நடத்தி வருகின்றன. அதிலும் முஸ்லிம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவிலேயே உள்ளன. இதுதான் இந்திய அளவில் உண்மை நிலைமை.


இதற்கு முக்கிய காரணம், மோடி அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உட்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதுதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டு, அகதிகளாய் இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க வகை செய்கிறது.


எனவே திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர். அதற்கானஆயத்த பணிகளை அவர்கள் தொடங்கி விட்டனர்.


இந்த பேரணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகளை அழைத்து வர அவர்கள் முடிவு செய்து உள்ளனர். அப்படி இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வரும் கட்சித் தொண்டர்களுடன் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் பங்கெடுக்க வைத்து, அவர்கள் மூலம் கலவரத்தை அரங்கேற்ற மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


இதனை உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுகவின் கலவரத்தை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரணியில் கலந்துகொள்ளும் திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் சார்பில் பங்கெடுக்கும் தொண்டர்கள் விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை முன் எச்சரிக்கையாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


திமுகவினரின் போராட்டத்தில் கலவரம் நடக்க உள்ளது என்பதை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் “வன்முறை என்று அஞ்சுபவர்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/Udhaystalin/status/1207729683439112192

Next Story