Top
undefined
Begin typing your search above and press return to search.

"திமுவுக்கு தேவை கலவரம், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

திமுவுக்கு தேவை கலவரம்,  அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Dec 2019 9:01 AM GMT


குடியுரிமை சட்ட குறித்து தவறான கருத்துக்களை பரப்பும் திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,ஹெச் ராஜா, நயினார் நாகேந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் ;


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களுக்கு தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர், குடியுரிமை சட்டம் இந்தியாவுக்கு மிகவும் பாதுகாப்பானது,23ஆம் தேதி தி.மு.க  நடத்தக்கூடிய போராட்டம்,பிணத்தை வைத்து அரசியல் செய்வார்கள் அவர்கள் தேவை போராட்டத்தில் கலவரம் வெடிக்க வேண்டும் அதில் யாராவது 4 பேர் சாக வேண்டும் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் 2021 ஆட்சியை பிடிக்க வேண்டும் அதுதான் அவர்களின் எண்ணம் என பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.


Next Story