Top
undefined
Begin typing your search above and press return to search.

இனி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்தியாவில் இருந்தபடியே அழிப்போம்! அமெரிக்கா சென்ற ராஜ்நாத் சிங் பேச்சு!

இனி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்தியாவில் இருந்தபடியே அழிப்போம்! அமெரிக்கா சென்ற ராஜ்நாத் சிங் பேச்சு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Dec 2019 12:16 PM GMT



மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமேரிக்கா சென்று அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பாதுகாப்பு, இராணுவம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். சந்திப்பும் பேச்சுவார்த்தையும் திருப்திகரமாக இருந்தது என கூறினார்.


அமெரிக்காவில் செய்தியாளர்களையும், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்த ராஜ்நாத் சிங் “இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம் கண்டுள்ளதாகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்தியாவின் ராணுவ வலிமை அதிகரித்து வருகிறது. பிற நாடுகளின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை, இதுதான் இந்தியாவின் குணம் என்றார்.


மேலும், “இந்திய ராணுவம் தற்போது முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுள்ளது, இனி தீவிரவாத முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குச் செல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அழித்துவிடலாம். பாகிஸ்தானுடன் எப்போதும் சுமூக உறவை மட்டுமே இந்தியா நாடி உள்ளது.


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார். ஆனால் பதிலுக்கு கார்கில் போரைப் பரிசாக தந்தனர். பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடன் சுமூக உறவை விரும்பினார். இப்போதும் பதிலுக்கு என்ன செய்தனர் என்பதை அனைவரும் அறிவர்,” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


Next Story