Top
undefined
Begin typing your search above and press return to search.

பெங்களூரில் தேசியகீதம் பாடி இஸ்லாமியர்கள் போராட்டத்தை நிறுத்திய போலீஸ் அதிகாரி! பொதுமக்கள் பாராட்டு!

பெங்களூரில் தேசியகீதம் பாடி இஸ்லாமியர்கள் போராட்டத்தை நிறுத்திய போலீஸ் அதிகாரி! பொதுமக்கள் பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Dec 2019 9:37 AM GMT


பெங்களூர் டவுன்ஹால் பகுதியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 144 தடை உத்தரவை மீறி முஸ்லிம் மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.


பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, ஆனாலும் போராட்டக்காரர்கள் பலத்த கோஷம் போட்டபடி இருந்தனர். அப்போது பரபரப்படைந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பெங்களூரு மத்திய மண்டல துணை கமி‌ஷனர் சேத்தன்சிங் ரத்தோர் ஒலி பெருக்கியில் பேசினார்.
இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் அவசியம் குறித்து உருக்கமாக பேசிய அவர் “நீங்கள் என்னை மதித்தால் நான் பாடும் பாடலை என்னோடு சேர்ந்து பாடுங்கள்” என்று கூறினார்.


அதன்பிறகு தேசிய கீதத்தை அவர் மனமுருக பாடினார். போராட்டக்காரர்கள் அனைவரும் உண்மையிலேயே சிறிது நேரம் கோ‌ஷமிடுவதை கைவிட்டு தேசிய கீதத்தை அவருடன் சேர்ந்து பாடினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ பேஸ்-புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் அமைதி காத்து கூட்டம் கலைந்து செல்ல சாதுர்யமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Next Story