Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரிவினைவாதிகளை கைலாஷில் அனுமதிக்க மாட்டோம்! நக்கல் பேச்சு பேசிய சீமானுக்கு நித்யானந்தா பதிலடி!

பிரிவினைவாதிகளை கைலாஷில் அனுமதிக்க மாட்டோம்! நக்கல் பேச்சு பேசிய சீமானுக்கு நித்யானந்தா பதிலடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Dec 2019 10:56 AM GMT



பல்வேறு புகார்களின் அடிப்படையில் தேடப்படும் இளம் வயது நித்யானந்தா சாமியார் தற்போது தலைமறைவாக உள்ளார். ஈக்வடாரில் தீவு வாங்கி கைலாசா என ஒரு நாட்டை அமைக்க ஐநாவில் அனுமதி கோரியுள்ளார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஈக்வடார் தூதரகம் அதற்கு மறுப்பு வெளியிட்டது.


இந்த நிலையில் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது குறித்து உளவு ஏஜன்சிகள் தகவல் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பேச்சில் நித்யானந்தாவைக் குறிப்பிட்டார்.


அவரது பேச்சில்“ என்.ஆர்.சி வந்த பின்னர் நான் பதிவு செய்ய வரும்போது அனைத்து ஆவணங்கள் கொடுத்தாலும் தூக்கிப் போட்டுவிட்டு உனக்குக் குடியுரிமை இல்லை என்பார்கள். கொடுத்துடு...பாஸ்போர்ட்டை கொடுத்துடு...ஓடிப் போய்விடுகிறேன் என்றுதான் சொல்கிறேன்.


எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை ராஜா, கைலாஷ்னு ஒரு நாடு உருவாயிடுச்சு. குடியுரிமையற்ற ஆளாக ஆக்கினால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எங்களுக்கு எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்காரு. அவரு கைலாஷ்னு ஒரு நாட்டை உருவாக்கிட்டாரு. நாங்க அங்க போய் அழகா இருந்துக்குவோம். இங்க ஒரே ரெப்ச்சரா இருக்கு’’ என மேடையில் பைத்தியம் பிடித்த வெறியன் போல தனக்குத்தானே ஒரு ‘அருவருப்பான சிரிப்பு’ சிரித்துக் கொண்டு நக்கல் பேச்சு பேசினார்.


இதற்கு நித்யானந்தா சார்பில் ட்விட்டரில் கைலாஷ் பிரதமர் அலுவலகம் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


அதில் பிரிவினைவாதிகளுக்கு எல்லாம் கைலாஷில் இடம் கிடையாது, உங்களை இங்கு அனுமதிக்க வேண்டு மென்றால் தமிழ் பிரிவினை அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!. இப்படிக்கு
- பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ்”. என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story