Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்க சாலை விபத்தில் ஒரே சமயத்தில் 69 வாகனங்கள் ஒன்றின் மீது ஓன்று மோதி கடும் சேதம்: 51 பேர் காயம்!

அமெரிக்க சாலை விபத்தில் ஒரே சமயத்தில் 69 வாகனங்கள் ஒன்றின் மீது ஓன்று மோதி கடும் சேதம்: 51 பேர் காயம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 11:15 AM GMT



அமெரிக்க மாகாணமான வர்ஜீனியாவிலுள்ள வில்லியம்ஸ்பர்க் நெடுஞ்சாலையில் 60க்கும் மேலான வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய விபத்தில் பலர் காயமடைந்ததாக மாநிலப் போலிசார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு முன்பாக வில்லியம்ஸ்பர்க் நகருக்கு அருகே நடைபெற்றதாக தலைமை போலிஸ் அதிகாரி மிஷல் திருவாட்டி அனயா தெரிவித்தார்.


விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலையை மீண்டும் திறந்து விடுவதற்குப் பல மணிநேரம் ஆனதாக அவர் கூறினார்.


விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கடும் மூடுபனியும், பனி மூட்டத்தால் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மூடப்பட்ட சாலையும் காரணங்களாக இருந்திருக்கும் என்றார் மிஷல் அனயா.


மொத்தம் 69 வாகனங்கள் விபத்தில் சிக்கியதோடு, 51 பேருக்கு நான்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்துக்கான சரியான காரணத்தை அறிய போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இதற்கிடையே, இந்த விபத்து நடந்த சாலையின் எதிர் திசையில் மற்றொரு சம்பவத்தில் எட்டு வாகனங்கள் விபத்தில் ஒரே சமயத்தில் சிக்கியமாகத் அனயா தெரிவித்தார். 


SOURCE:- BBC NEWS


Next Story