Top
undefined
Begin typing your search above and press return to search.

அரிசி கொள்முதலில் காங்கிரசார் ஊழல்: புதுவையில் இனி புழுத்துப் போன அரிசிக்கு பதிலாக பணம்தான் வழங்கப்படும்! மத்திய உள்துறை அதிரடி உத்தரவு!

அரிசி கொள்முதலில் காங்கிரசார் ஊழல்: புதுவையில் இனி புழுத்துப் போன அரிசிக்கு பதிலாக பணம்தான் வழங்கப்படும்! மத்திய உள்துறை அதிரடி உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 12:43 PM GMT


புதுவையில் ரே‌ஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு நடப்பதாகவும், தரமான அரிசி வழங்கப்படாமல் கெட்டுப் போன, புழுத்துப் போன அரிசிதான் வழங்கப்படுவதாகவும், இதை பொதுமக்களில் அதிகம் பேர் வாங்குவதில்லை என்றும், வாங்குபவர்கள் இதை மாட்டுத் தீவனமாக பயன்படுத்துவதாகவும் ஏராளமான புகார்களை பொது மக்கள் கவர்னர் கிரன்பேடிக்கு தெரிவித்தனர். இதுதொடர்பாக கவர்னர் உத்தரவிட்டு வழக்குபதிவு செய்யப்பட்டு விஜிலென்ஸ் விசாரணையும் நடந்து வருகிறது.


புகார்களை அடுத்து, பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலும் இலவச அரிசியாக வழங்குவது தொடரும் எனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் மோதல் நிலவியதை அடுத்து, இலவச அரிசி விவகாரத்தை மத்திய அரசின் முடிவுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்.


இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதுவையில் இனி இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்குவது தொடர வேண்டும், அரிசியாக வழங்கக் கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சக கடிதத்தை மேற்கொள்காட்டி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள தகவலில்: மத்திய அரசின் முடிவு வரவேற்கதக்கது. இதன்மூலம், அரிசி விநியோகத்தில் ஊழல் நடைமுறை தடுக்கப்படுவதுடன், ஏழை மக்கள் நல்ல அரிசியை அரசு தரும் பணம் மூலம் வாங்கி சாப்பிடுவார்கள் என கூறினார்.


புதுவையில் 20 கிலோ அரிசி வாங்கும் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 16 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த அரிசிக்கு பதிலாக ரூ.3.000 அரசு சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் நேற்று 10 கிலோ அரிசி வாங்கும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1.500-ம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story