Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க பேரணியால், எழும்பூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! பொது மக்கள் கடும் அவதி!

தி.மு.க பேரணியால், எழும்பூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! பொது மக்கள் கடும் அவதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 11:18 AM GMT


தேசிய குடியுரிமை திருத்தச்சட்டதால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இங்கிருந்து துரத்தியடிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தூண்டுதலால், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மத வெறியர்கள், கலவரங்களை தூண்டி வருகின்றனர். அதற்கு பின்னணியில் இருந்து காங்கிரஸ், திமுக போன்ற கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சென்னையில் திமுக பேரணி நடத்தியது. இந்த பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. அது ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு அடைந்தது.


இந்த பேரணி சென்ற பாதையில் வேறு எந்த வாகனங்களும் 2 மணி நேரம் அனுமதிக்கப்பட வில்லை. எனவே பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.


எத்திராஜ் கல்லூரி வழியாக எழும்பூர் வந்தவர்கள், ருக்மணி - லட்சுமிபதி சாலையில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் எழும்பூரிலிருந்து புதுப்பேட்டை சாலை, சி.பா.ஆதித்தனார் சாலை, லேங்ஸ் தோட்ட சாலை ஆகிய சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.


இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் ரயில் நிலைய சாலை, நுங்கம்பாக்கம் - எழும்பூர் சாலை, எத்திராஜ் சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இந்த பேரணியில் 5000-க்கும் குறைவான திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாணவ – மாணவிகளும், நடிகர்கள் – நடிகைகளும், பொது மக்களும், திமுகவின் பேரணியை புறக்கணித்தனர். முஸ்லிம்கள் எண்ணிக்கையும் மிகப் பெரிய அளவில் இல்லை. சொற்ப அளவிலேயே அவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் 15,000-க்கும் அதிகமான ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story