Top
undefined
Begin typing your search above and press return to search.

வேலையில ஸ்ட்ரெஸ் ஆ….? ஸ்ட்ரெஸ்ஸ குறைக்க உடனடி வழிகள் இங்கே ..!

வேலையில ஸ்ட்ரெஸ் ஆ….?  ஸ்ட்ரெஸ்ஸ குறைக்க  உடனடி வழிகள் இங்கே ..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 2:43 AM GMT


ஒவ்வொருவரின்
வாழ்க்கை சூழலும் ஒவ்வொரு விதமான அழுத்த சூழலை உருவாக்கியிருக்கும். கடின
உழைப்பில் உச்சம் காண்பவர் கூட ஓய்வுக்கென ஓர் நாள் ஒதுக்குவது இயல்பு, இது அவர்களின் உணர்வு மனநிலையை சீராக வைக்க
கூடியது. சில நேரங்களில் உணர்ச்சிகள் கட்டுபாட்டில் இல்லாத போது ஏற்படக்கூடிய
தவறுகள் வாழ்க்கையையே புரட்டி போடக்கூடியதாக இருப்பதும் நிகழ்வதே.


1. பேசுவதற்கோ அல்லது வெளிப்படுத்துவதற்கோ முன்பு 20 வரை எண்ணுங்கள்.


2. உடலில் மாற்றத்தை உணரும் வரை, மெதுவாக மற்றும் ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள்


3. இருக்கும் இடத்திலிருந்து சிறிய மாற்றம் வேண்டி
சிறிய நடையை மேற்கொள்ளுங்கள். அது ஓய்வுஅறை/கழிப்பறைக்கு செல்வதாக கூட இருக்கலாம்.
இது ஒருவித உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்


4. சில நல்ல நேர்மறை எண்ணங்களை தூண்டும் சிறிய
தியானத்தையோ அல்லது பிரார்த்தனையையோ மேற்கொள்ளலாம்.


5. நீங்கள் கட்டுப்பாடு இழந்த சூழல் அவசரமற்றது எனில்,
உறங்க செல்லுங்கள். புத்துணர்வு மிக்க
துவக்கம் நேர்மறையான அதிர்வுகளை ஈர்க்க வல்லது


6. அழுத்தம் மிகு சூழலிலிருந்து வெளியேறி சற்று
ஆசுவாசப்படும் வரை அவகாசம் கொடுங்கள், சமயங்களில்
இயல்பான அணுகுமுறையே சரியான முடிவாக அமையும்


7. அனைத்து பிரச்சனையையும் ஒரே நேரத்தில்
எதிர்கொள்வதை காட்டிலும் பெரும் பிரச்சனைகளை, சில துண்டுகளாக உடையுங்கள், ஒவ்வொன்றையும் ஒவ்வொறு படியாக அணுகுங்கள்.


8. சிறிய ஓய்வை
எடுத்து கொண்டு செல்ல பிராணிகளை கொஞ்சுங்கள், நெருங்கிய உறவுகளுடன் நேரத்தை செலவிடுங்கள்


9. நல்ல இசை நிச்சயம் உங்கள் அகச்சூழலை மாற்றும்

10. சில உற்சாகமான, உத்வேகமான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக உடற்பயிற்சி


Next Story