Top
undefined
Begin typing your search above and press return to search.

மகாத்மா காந்தி, நேருவின் விருப்பத்தையே மோடி அரசு நிறைவேற்றியுள்ளது! குடியுரிமை சட்டம் குறித்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கருத்து!

மகாத்மா காந்தி, நேருவின் விருப்பத்தையே மோடி அரசு நிறைவேற்றியுள்ளது! குடியுரிமை சட்டம் குறித்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கருத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 5:45 AM GMT


அண்டை முஸ்லிம் நாடுகளில் இந்துக்கள் உட்பட முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் அனுபவிக்கும் மோசமான சூழ்நிலைகளே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் கட்டாயத்தை மோடி அரசுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும், அரசு தற்போது எடுத்துள்ள முடிவின் காரணங்களை மகாத்மா காந்தியும், அப்போதைய பிரதமர் நேருவும் 1947 ஆம் ஆண்டிலேயே உணர்ந்திருந்தார்கள் என்றும் முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவரும் தற்போதைய கேரள ஆளுநருமான ஆரிஃப் முகமது கான் வெளிப்படையாக தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் : பாகிஸ்தானில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமையை வழங்குவதற்கான யோசனையை முன்வைத்தவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர். அவரது எண்ணத்தை பண்டிட் ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் மவுலானா ஆசாத் போன்ற பிற தலைவர்களும் கடுமையாக ஆதரித்தனர்.


இந்தியா மத அடிப்படையில் மட்டுமே துண்டாடப்பட்டது. அதற்கு காரணம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாதான். அவர் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரு போதும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள், சுண்ணாம்பும் ...வெண்ணெயும் போல எதிர்மறை பண்புகளை உடையவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் ஒரு இந்து ஒருபோதும் முஸ்லிம் ஆகமாட்டார், அதே போல முஸ்லிம் இந்து ஆக முடியாது என அவ்வப்போது கூறி வந்தார். ஆனால் பாகிஸ்தான் தனி நாடானதும் அவர் தனது சுருதியை மாற்றிக் கொண்டார் அவரின் முரண்பாடான பேச்சுக்கள் ஒருவித அச்சுறுத்தலை தோற்றுவித்தன. அதனால்தான் காந்தியும், நேருவும் குடியுரிமை வழங்கும் முடிவில் உறுதியாக இருந்தனர்.


ஆனால் இந்த விவகாரம் இன்றைக்கு வகுப்புவாதமாகவே பார்க்கப்படுகிறது, இந்த விவகாரத்தில் தேசிய அளவில் முன்பு ஒருமித்த கருத்து தெரிவித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், அசோக் கெஹ்லோட் மற்றும் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தற்போது தங்கள் அரசியல் சுய நலன்களுக்காக இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார் .


குடிமக்களின் தேசிய பதிவேட்டை (என்.ஆர்.சி) பொருத்தவரை, தனது நாட்டின் குடிமக்கள் பதிவு இல்லாமல் எந்த நாடும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் காங்கிரஸ் குழந்தை தனத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.


நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக நிகழ்ச்சி ஒன்றில் “குடியுரிமை மற்றும் நாகரிகம்” என்ற தலைப்பில் பேசும்போது ஆரிஃப் முகமது கான் இவ்வாறு பேசினார்.


Source:-https://www.news18.com/news/india/gandhi-nehru-had-committed-to-give-citizenship-to-persecuted-minorities-of-pakistan-arif-mohammad-khan-2432171.html


Next Story