Top
undefined
Begin typing your search above and press return to search.

பாதுகாப்புக்கு வந்த போலீசாரை, தி.மு.க பேரணியில் கலந்து கொண்டு உணர்வை வெளிப்படுத்திய போலீசார் என்றார்! - மு.க.ஸ்டாலினின் புதிய உளறல்!

பாதுகாப்புக்கு வந்த போலீசாரை, தி.மு.க பேரணியில் கலந்து கொண்டு உணர்வை வெளிப்படுத்திய போலீசார் என்றார்! - மு.க.ஸ்டாலினின் புதிய உளறல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 10:41 AM GMT


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தானிய முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுடன் சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கைகோர்த்து உள்ளன.


இவர்கள் இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பொய்யான தகவல்களைப் பரப்பி இந்தியா முழுவதும் கலவரத்தை தூண்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு மாணவர்கள், நடிகர்கள் - நடிகைகள், விவசாயிகள் உள்பட 98 கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார்.


பேரணி, எழும்பூர் சி.எம்.டி.ஏ அலுவலகம் அருகில் தொடங்கியது. லேங்ஸ் கார்டன் சாலை, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது.


அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-






இது பேரணி அல்ல. போர் அணி. இந்தக் கொடிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவில்லை என்று சொன்னால், அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நம்முடைய கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி, ஏன் அதையும் கடந்து, தமிழகத்திலுள்ள கட்சிக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய அனைவரையும் அரவணைத்து, அழைத்து ஒன்றுசேர்த்து, நல்லபடி பேசி, மிகப்பெரிய போராட்டத்தை, இந்தக் கொடிய சட்டத்தை திரும்பப் பெறுவது வரையில் இந்த போராட்டத்தை நடத்துவோம்.


10,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இதில் பங்கேற்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் நன்றி.


இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


திமுகவின் பேரணியில் கலவரம் நடக்க உள்ளது என்று வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு வந்த போலீசாரை, திமுக பேரணியில் கலந்து கொண்ட போலீசார் என்று மு.க.ஸ்டாலின் உளறினார்.


இந்த பேரணியில் 5000-க்கும் குறைவான திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாணவ – மாணவிகளும், நடிகர்கள் – நடிகைகளும், பொது மக்களும், திமுகவின் பேரணியை புறக்கணித்தனர். ஆனால் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் எண்ணிக்கை 15,000-க்கும் அதிகமான இருந்தது.


Next Story