Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை நந்தனத்தில் ஜனவரி 9- முதல் 21-ந் தேதி வரை பிரம்மாண்ட புத்தக கண் காட்சி! தினமும் புத்தக வெளியீடுகள், சிறந்த எழுத்தாளர், கவிஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள்!

சென்னை நந்தனத்தில் ஜனவரி 9- முதல் 21-ந் தேதி வரை பிரம்மாண்ட புத்தக கண் காட்சி! தினமும் புத்தக வெளியீடுகள், சிறந்த எழுத்தாளர், கவிஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2019 10:48 AM GMT



43-வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. இதில் 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.


தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள 43-வது சென்னை புத்தக காட்சி தொடர்பாக பபாசியின் தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசிய அவர்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 43-வது சென்னை புத்தக காட்சி வருகிற ஜனவரி 9-ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை 13 நாட்கள் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.


தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் கீழடி- ஈரடி என்ற தலைப்பில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட தொல்பொருட்களின் மாதிரிகளைக் கொண்ட பிரமாண்டமான அரங்கம் தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட உள்ளது.


புத்தகக் காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகள் அனுப்பி வைக்க உள்ளோம். சுமார் 5 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியர்கள் ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசிக்கும் கொடுக்கிறது என்ற நிகழ்ச்சி புத்தகக்காட்சி நடைபெற உள்ள அதே மைதானத்தில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலதரப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.
13 நாட்களும் புத்தக வெளியீடுகள், தலைசிறந்த எழுத்தாளர்கள் கவிஞர்கள் விஞ்ஞானிகள் கலை உலகினர் பங்கு பெறும் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற உள்ளதாகவும்,700 க்கும் அதிகமான அரங்குகளில் 15 லட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் இரண்டு கோடி புத்தகங்கள் இடம் பெற உள்ளன.


மேலும் சென்னை மெட்ரோவுடன் இணைந்து இம்முறை விளம்பரபடுத்தவுள்ளதாகவும், மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இலவச அனுமதி உண்டு எனவும் தெரிவித்தனர்.புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பதிப்பகங்களின் புத்தகங்களை அறிந்து கொள்வதற்கு தனி செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Next Story