Top
undefined
Begin typing your search above and press return to search.

படிக்க வந்தவர் இந்தியாவுக்கு எதிராக போராடினார்! சென்னை ஐஐடியில் படித்த ஜெர்மன் மாணவர், ஜெர்மனிக்கே துரத்தப்பட்டார்!

படிக்க வந்தவர் இந்தியாவுக்கு எதிராக போராடினார்! சென்னை ஐஐடியில் படித்த ஜெர்மன் மாணவர், ஜெர்மனிக்கே துரத்தப்பட்டார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2019 7:30 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் மதவெறியர்களால் துரத்தியடிக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் போன்ற அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.


இந்த சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவான விஷயம். இருந்தாலும் இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது போன்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இதுபோல, பாகிஸ்தானிய முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இவர்கள் இந்தியா முழுவதும் வன்முறையை தூண்டி குளிர்காய முயற்சிக்கின்றனர். இதற்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். குறிப்பாக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம், சென்னையிலுள்ள புதுக்கல்லூரி உள்பட நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் பயிலும் அப்பாவி மாணவர்களை மத உணர்வை தூண்டி போராட்டக் களத்தில் இறங்கி வருகின்றனர். அவர்கள் பஸ் எரிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பின்னணியில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும், கம்யூனிஸ்ட் நக்சலைட் பயங்கரவாதி அமைப்புகளும் இருந்து செயல்படுத்டதி வருகின்றன.


இதற்கிடையே தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றுவதற்கு இந்த கும்பல்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்தின. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு முஸ்லிம் கல்லூரிகளில் போராட்டங்களை அரங்கேற்றினர்.


சென்னை ஐஐடி மாணவர்கள் என்ற போர்வையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இங்குள்ள முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர்கள் அமைப்புகள் இணைந்து இந்த போராட்டங்களை நடத்தின.


இந்த போராட்டங்களில் சென்னை ஐஐடி-யில் படித்து வந்த ஜேகோப் லிண்டெந்தால் என்ற மாணவரும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னை ஐஐடியில் இயற்பியல் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.


இவர் சென்னை ஐஐடியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் மாணவர்களும், கம்யூனிஸ்ட் நக்சல் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். இதேபோல வள்ளுவர் கோட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் நடந்த போராட்டம், சேப்பாக்கத்தில் நடந்த போராட்டம் உள்பட பல இடங்களில் நடந்த போராட்டங்களில் இவர் பங்கெடுத்து உள்ளார்.




https://twitter.com/jinoyjosep/status/1209091442104098816


ஒரு போராட்டத்தின்போது “1933 முதல் 1945 வரை நாங்கள் அங்கே இருந்தோம்” என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை அவர் தூக்கிப் பிடித்து இருந்தார். அதாவது ஜெர்மனியில் அந்த காலகட்டத்தில் ஹிட்லர் ஆட்சி நடந்தது. அதேபோல இந்தியாவில் இப்போது ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்ற பொருளில் இந்த அட்டையை அவர் வைத்துள்ளார். இது போல அவர் கலந்துகொண்ட ஒவ்வொரு போராட்டங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை காண்டித்துள்ளார்.






இதுபற்றி தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக குடியேற்ற துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குடியேற்ற துறை அதிகாரிகள், இந்திய அரசுக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் ஜேகோப் லிண்டெந்தால் இங்கு தங்கிப் படிப்பதற்கான அனுமதியை ரத்து செய்து, உடனடியாக அவரை ஜெர்மனுக்கு திருப்பி அனுப்பினர்.


இந்தியாவில் படிக்க வந்த ஜேகோப் லிண்டெந்தால், இந்திய அரசுக்கே எதிராக போராடியுள்ளார் என்றால், அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல்? அவரை தூண்டிய இங்குள்ள கும்பல்கள் எவை போன்ற கோணங்களில் பாதுகாப்புத்துறை அதிகாரிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story