Top
undefined
Begin typing your search above and press return to search.

குடியுரிமை திருத்த சட்டம்: தேசிய அளவில் 3 தலைமை பிரச்சார ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக எச்.ராஜா நியமனம்!

குடியுரிமை திருத்த சட்டம்: தேசிய அளவில் 3 தலைமை பிரச்சார ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக எச்.ராஜா நியமனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2019 5:10 AM GMT


குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாஜக சார்பில் நாடு முழுவதும் கருத்தரங்கங்கள், பேரணிகள், மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தேசிய அளவில் மூவர் தலைமையில் வழிகாட்டும் குழுவை பாஜக தேசிய தலைமை, தலைவர் அமித்ஷா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அறிவித்துள்ளது.


இதன்படி, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக தேசிய துணை தலைவருமான திரு.சிவராஜ் சிங் செளகான், பாஜக தேசிய பொது செயலாளர் திரு.அருண்சிங், தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா உள்ளிட்ட மூவரும் இந்த குழுவின் வழிகாட்டும் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதன்படி இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பிரச்சார வியூகங்களை அமைத்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகளால் முன்வைக்கப்படும் பொய்யான தகவல்கள், பிரச்சாரங்களை முறியடித்து உண்மையில் அரசின் நோக்கங்களை தெளிவுபடுத்த உள்ளனர்.


முக்கியமான இக் காலக் கட்டத்தில் இந்த விவகாரத்தில் அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த பாரத அளவில் எச்.ராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் தமிழக பாஜகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள எச்.ராஜாவின் ஆயிரக்கணக்கான அபிமானிகள் சமூக ஊடகங்களின் மூலம் தங்கள் மகிழ்ச்சியையும் அவர் பணி மேலும் சிறக்கவும் தங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story