Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டன! கதற வைக்கும் கண்ணீர் பேட்டி!

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டன! கதற வைக்கும் கண்ணீர் பேட்டி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2019 7:08 AM GMT


குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்ததன் அடிப்படைக் காரணமே நமது இஸ்லாமிய அண்டை நாடுகளில் மத அடிப்படையிலான துன்புறுத்தலை எதிர் கொண்டு இந்தியா வந்து சேர்ந்த சிறுபான்மை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதுதான்.


இந்த உரிமையைப் பெறவேண்டி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் இந்துக்கள் உட்பட்ட சிறுபான்மையினர் தாங்கள் ஏன் மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்பதற்கான காரணங்களை ஒரு ஆங்கில இதழுக்கான வீடியோ பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளனர். ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்ட ஒலி ஸ்கிரிப்டின் தமிழாக்கம் இது. இத்துடன் ஒரிஜினல் வீடியோ பேட்டியின் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது.


பேட்டி விபரம் :


பத்திரிகையாளர் - உங்கள் பெயர் என்ன?


பாதிக்கப்பட்டவர் 1 - மீரா டே


பத்திரிகையாளர் - நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?


பாதிக்கப்பட்டவர் 1 – பாகிஸ்தானில் உள்ள சிந்து ஹைதராபாத்தில் இருந்து


பத்திரிகையாளர் - நீங்கள் எப்போது இங்கு வந்தீர்கள்?


பாதிக்கப்பட்டவர் 1 - நாங்கள் இங்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன ..


பத்திரிகையாளர் - நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லவில்லை?


பாதிக்கப்பட்டவர் 1 - நாங்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை; இந்துக்களாக எங்களுக்கு வாழ அங்கு உரிமை இல்லை, அவர்கள் எங்கள் மதத்தை (தர்மத்தை) மதிக்க மாட்டார்கள், பிறகு நாங்கள் எப்படி திரும்பி செல்வோம்.


பத்திரிகையாளர் - அவர்கள் உங்கள் மதத்தை மதிக்கவில்லை, உங்களுக்கு வாழ உரிமை இல்லை என்பதை எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?


பாதிக்கப்பட்டவர் 1 - அவர்கள் எங்களை எங்கள் சம்பிரதாயங்களுடன் வாழ அங்கே அனுமதிக்க மாட்டார்கள்; அவர்கள் எங்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்ற பல நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். அவர்கள் எங்களுடைய மதத்திற்கு எதிரான வழக்கமான மாட்டிறைச்சியை கட்டாயப்படுத்தி சாப்பிடச் செய்கிறார்கள், நாங்கள் எப்படி அத்தகைய வாழ்க்கையை வாழ முடியும்? நான் ஒரு திருமணமான பெண் என்றாலும், சிண்டூர் போன்ற அடிப்படை சடங்குகளை கூட என்னால் அங்கு பின்பற்ற முடியாது. அங்கு நாங்கள் ஒரு முஸ்லிம்களைப் போல வாழ்க்கையை நடத்துவது எப்படி? எங்கள் மதங்கள் மிகவும் மரியாதைக்குரியவை, புனிதமானவை, நாங்கள் இந்துவாக வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்.


பாதிக்கப்பட்டவர் 2 - இந்தியாவுக்குச் செல்வதற்கான விசா, பாஸ்போர்ட் ஏதேனும் குடும்பத்துடன் அல்லது குழுவுடன் பெற்றிருந்தால், அதை அங்குள்ள முஸ்லிம்கள் தெரிந்து கொண்டால், அதே இரவில் ஒரு கும்பல் அவர்களை துப்பாக்கிகளால் சூழ்ந்து கொள்கிறது, அவர்களை சூறையாடுகிறார்கள், பாஸ்போர்டை பறித்துக் கொள்வார்கள், அனைத்து கால்நடைகளையும் அபகரித்துக் கொள்வார்கள்’, வீட்டிற்குள் நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள், அவர்களிடம் உள்ள பணத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த பிறகு அவர்கள் ஆண்களின் கைகளையும் கால்களையும் கட்டி வைத்துவிட்டு கிளம்பி விடுவார்கள். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்கும் வரை ஆண்களின் கால்கள் கட்டப்பட்டிருக்கும்.


பத்திரிகையாளர் - அவர்கள் பெண்களை அழைத்துச் சென்றார்களா?


பாதிக்கப்பட்டவர் 2 - இல்லை, அவர்கள் பெண்களை அழைத்துச் செல்லவில்லை, ஆனால் அவர்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் துன்புறுத்தினர். பணம், விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை தயாராக இருந்தும் அவர்களால் இங்கு வர முடியவில்லை.


பத்திரிகையாளர் - இந்த சம்பவம் எப்போது நடந்தது?


பாதிக்கப்பட்டவர் 2 - மார்ச் மாதத்தில் நாங்கள் இங்கு வந்தோம், இந்த சம்பவம் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது.


பத்திரிகையாளர் - எந்த ஊடகமும் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தவில்லையா ?


பாதிக்கப்பட்டவர் 2 - அங்கு ஊடகங்கள் இது போன்ற கதைகளை வெளியில் சொல்ல முடியாது, மேலும் போலீசாரும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இப்போது அவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்.


பத்திரிகையாளர் - எனவே, இந்துக்களுக்கு அரசாங்கத்தின் உதவி எதுவும் இல்லை என்கிறீர்களா. இந்துக்கள் மீது கடவுள் கருணை காட்டினால் மட்டும்தானா ?


பாதிக்கப்பட்டவர் 2 – அரசு உதவி எதுவும் உண்மையில் இல்லை. ஆனால் ஒரு ஷோவுக்காக அவர்கள் உதவி செய்வது போல காட்டிக் கொள்வார்கள்.


பத்திரிகையாளர் – சரி.. இப்போது அங்கே எஞ்சியிருக்கும் இந்துக்கள் இங்கு வருவதற்கான சரியான நேரத்துக்கு காத்திருக்கிறார்களா !


பாதிக்கப்பட்டவர் 2 – ஆமாம் ..மீதமுள்ள இந்துக்களும் அங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள், அதுதான் உண்மை …


பத்திரிகையாளர் – இங்கே வந்துவிட்டால் யாரும் இனி பாகிஸ்தானுக்கு திரும்பிப் போக மாட்டார்களா?


பாதிக்கப்பட்டவர் 2 - இல்லை, யாரும் திரும்பிச் செல்ல மாட்டார்கள். உண்மையில் அங்குள்ள மக்களுக்கு இந்திய தூதரகத்திலிருந்து விசா கிடைத்தவுடன் அவர்கள் உடனே இந்தியாவுக்கு கிளம்பிவிடுவார்கள்.


பத்திரிகையாளர் – நீங்கள் திரும்பிச் செல்ல ரூ.25 லட்சம் கொடுத்தால், நீங்கள் பாகிஸ்தானுக்கே மீண்டும் திரும்புவீர்களா?


பாதிக்கப்பட்டவர் 2 - இல்லை, நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம், ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்.


மற்றொரு பாதிக்கப்பட்டவருடன் ஒரு உரையாடல்


பத்திரிகையாளர் - நீங்களும் சிந்துவிலிருந்து வந்திருக்கிறீர்களா?


பாதிக்கப்பட்டவர் 3 - ஆம், நாங்களும் சிந்துவிலிருந்து வந்திருக்கிறோம்.


பத்திரிகையாளர் – உங்களுடைய குறிப்பிடத்தகுந்த அனுபவம் பற்றி ஏதேனும் கூற முடியுமா?


பாதிக்கப்பட்டவர் 3 - ஆமாம், பெண்களின் நிலைமை அங்கு மிகவும் மோசமானது, பெண்கள் மீது ஏராளமான துஷ்பிரயோகத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் சீக்கியர்களின் நிலை மோசமாக உள்ளது.


பத்திரிகையாளர் – சீக்கியர்கள் மீது மட்டும் ஏன் இது போன்ற அதிக துன்புறுத்தல் ?


பாதிக்கப்பட்டவர் 3 - அங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களை விட சீக்கியர்களையே அதிக அளவில் மரியாதை குறைவாக நடத்துகிறார்கள்.


பத்திரிகையாளர் - ஆனால் காலிஸ்தானில் இருந்து நாங்கள் கேள்விப்படுவது என்னவென்றால் அங்கே முஸ்லிம்களுக்கும் சர்தார்களுக்கும் இடையில் நிறைய அன்பும் மரியாதையும் இருக்கிறது, அவர்கள் ஒன்றாக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறதே .. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?


பாதிக்கப்பட்டவர் 3 - அப்படியானால், நாங்கள் ஏன் இங்கேயே இருக்க விரும்புகிறோம் ? நாங்கள் கடந்த 10 முதல் 11 ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம், எனவே அங்குள்ள சீக்கியர்களின் மீதமுள்ள நிலையை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.




https://youtu.be/1BPvqBI5mOE


பத்திரிகையாளர் - உங்கள் பகுதியில் இருந்து இதுபோன்ற எத்தனை சர்தார்கள் வெளியேறிவிட்டார்கள்?


பாதிக்கப்பட்டவர் 3 - அவர்களில் 4000 முதல் 5000 பேர் வரை இதுவரை வெளியேறிவிட்டனர்.


பத்திரிகையாளர் - அவர்கள் இன்னும் அந்த இடத்தை விட்டு தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருக்கிறார்களா ?


பாதிக்கப்பட்டவர் 3 - ஆமாம், அவர்கள் இன்னும் வெளியேறுகிறார்கள், யார் விசா பெறுகிறார்களோ அவர்கள் மட்டும் அங்கிருந்து புறப்படுகிறார்கள்.


பத்திரிகையாளர் - இங்கே இந்தியாவில் உங்களுக்கு யார் உதவுகிறார்கள்?


பாதிக்கப்பட்டவர் 3 - ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள இந்து மற்றும் சர்தார் தொண்டர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள்.


பத்திரிகையாளர் - அவர்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார்கள்?


பாதிக்கப்பட்டவர் 3 - விசா பெறும் வழி முறைகள் குறித்து அவர்கள் எங்களுக்கு வழிகாட்டி உதவுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் நிலைமை குறித்து கூறியுள்ளனர்.


பல ஆண்டுகளாக நடக்கும் துன்புறுத்தல் குறித்து ஐநா அறிக்கை


இது போன்ற துன்புறுத்தல்கள் இப்போது மட்டும் அல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, மேற்கு மாகாணப் பகுதிகளில் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் இந்து சிறுபான்மையினர் மீது தொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


குறிப்பாக சிறுபான்மை பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் குறித்து ஆராய்ந்து அறிந்த ஐக்கிய நாடுகளின் மகளிர் நலன் அமைப்பு (சி.எஸ்.டபிள்யூ) பாகிஸ்தான் அரசு குறித்த மோசமான பதிவுகளை செய்துள்ளது. இது குறித்து அவர்கள் பதிவிட்ட 48 பக்க ஆவணம் சென்ற டிசம்பர் 15, 2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் கொடூரங்களை விவரிக்கிறது.


Source:- https://www.pgurus.com/the-real-facts-about-the-lives-of-minorities-in-pakistan/


Next Story