Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தானில் மோடி பாணியில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்: 100 தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சாவு, 45 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானில் மோடி பாணியில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்: 100 தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சாவு, 45 பேர் படுகாயம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2019 9:19 AM GMT


ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை விட அதிக முஸ்லிம் விகிதாச்சாரம் கொண்ட நாடு. ஆனால் அதிக அளவில் பயங்கரவாதத்தை இந்தியா போல எதிர் கொண்ட நாடு. இதற்கு காரணம் பாகிஸ்தானில் உள்ள மத வெறி பிடித்த இராணுவமும், அங்குள்ள அரசும் தான்.


இந்த நிலையில் இந்தியாவைப் புரிந்து கொண்டு எப்போதும் நல்லுறவு கொண்டு வரும் பாரம்பர்ய இஸ்லாமியர்கள் வாழும் ஆப்கானிஸ்தான் இந்தியாவில் மோடி ஆட்சி ஏற்பட்டதும் அதிக உறவை வளர்த்துக் கொண்டது. இஸ்லாமிய மதம் பெரிய அளவில் பரவாத காலத்தில், தற்போதுள்ள ஆப்கானிஸ்தான் பகுதிகள் இந்து மக்கள் முழுவதுமாக வசித்த பகுதிகளாகவும், இந்து மன்னர்கள் ஆட்சிக்கும் உட்பட்டே இருந்தன.


இதைத்தான் அகன்ற பாரதத்தின் பகுதி என முன்னோர்கள் கூறி வருகின்றனர்.


இதை மனதில் வைத்து ஆப்கானிய அரசு மற்றும் மோடி தலைமையிலான இந்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டன.


இதன் அடிப்படையில் இந்திய இராணுவம் மற்றும் ஆப்கான் இராணுவம் இடையே நடை பெற்ற கூட்டுப் பயிற்சிகளில் தீவிரவாதிகளை கூண்டோடு காலி செய்யும் பயிற்சியை ஆப்கானிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் இருந்து கற்றது. மேலும் இந்தியாவிடம் இருந்து சில தொழில் நுட்ப சாதனங்களையும் பெற்ற அந்த நாடு தற்போது முதன் முதலாக மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது.  
இதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 15 மாகாணங்களில் 2 0க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த தாக்குதலில் 45 பேர் படு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.


SOURCE:- https://www.freepressjournal.in/world/100-terrorists-killed-45-injured-in-operations-conducted-by-afghan-forces-in-last-24-hours


Next Story