Top
undefined
Begin typing your search above and press return to search.

“கலவரத்திற்கு தலைமை தாங்குபவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்?” – போட்டு தாக்கிய ராணுவ தளபதி!

“கலவரத்திற்கு தலைமை தாங்குபவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்?” – போட்டு தாக்கிய ராணுவ தளபதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2019 10:02 AM GMT


ராணுவ தளபதி பிபின் ராவத், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தலைமை பொறுப்பு குறித்து நமக்குள் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தலைவர் முன்னோக்கி சென்றால், மற்றவர்கள் அவரை பின்தொடர்ந்து செல்வார்கள். இது ஒரு சாதாரண விஷயமே அல்ல. நமது தலைவர்களை, நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும்.


ஆனால் தலைவர்கள் மக்களை சரியான பாதையில் வழி நடத்துவது இல்லை. தவறான பாதையில் மக்களை வழி நடத்துபவர்கள் எப்படி சரியான தலைவர்களாக இருக்க முடியும்? ஒரு போதும் அவர்கள் சரியான தலைவர்களாக இருக்க முடியாது.


சமீபத்தில் நாடுமுழுவதும், பல்வேறு நகரங்களில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் மாணவர்களை கலவரங்களில் ஈடுபடுத்தினார்கள். இவைகளை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இப்படிப்பட்ட தலைவர்கள் நல்ல தலைவர்கள் அல்ல. தலைவர்கள் என்பவர்கள் கலவரம் மற்றும் வன்முறைகளுக்கு ஒருபோதும் தலைமை ஏற்க கூடாது.


இவ்வாறு ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.


Next Story