Kathir News
Begin typing your search above and press return to search.

"ஜான்சன் & ஜான்சன்" நிறுவனத்தின் ஜி.எஸ்.டி மோசடி அம்பலம்! ரூ.230 கோடி அபராதம் விதித்தது மோடி அரசு!

"ஜான்சன் & ஜான்சன்" நிறுவனத்தின் ஜி.எஸ்.டி மோசடி அம்பலம்! ரூ.230 கோடி அபராதம் விதித்தது மோடி அரசு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஜி.எஸ்.டி மோசடி அம்பலம்! ரூ.230 கோடி அபராதம் விதித்தது மோடி அரசு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2019 4:39 AM GMT



ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு முறைகளில் மோசடி செய்வதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரியானது அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி சில பொருட்களுக்கு 18 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது.


ஆனால் “நெஸ்லே”, “ஜான்சன் அண்ட் ஜான்சன்” போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத ஜிஎஸ்டி வரியை மக்களிடம் வசூலித்துள்ளது. அதேநேரம் அரசுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை கட்டி மோசடி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இந்த மோசடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கியது “நெக்ஸ்லே” பிளே நிறுவனம். இதனால் இந்த நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


இந்தநிலையில் “ஜான்சன் அண்ட் ஜான்சன்” நிறுவனமும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு மக்களிடம் கூடுதல் பணத்தை பிடுங்கியது தெரியவந்துள்ளது. இதனை என்.ஏ.ஏ (National Anti Profiteering Authority) என்ற மத்திய அரசு நிறுவனம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


இதனைதொடர்ந்து ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட “ஜான்சன் அண்ட் ஜான்சன்” நிறுவனத்திற்கு மோடி அரசு 230 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


இதுபோன்று மற்ற நிறுவனங்கள் மீதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News