Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணியினர் ஆளும் மாநிலங்களில் மட்டும் எதிர்கட்சிகள் கலவரங்களை தூண்டுகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு!

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணியினர் ஆளும் மாநிலங்களில் மட்டும் எதிர்கட்சிகள் கலவரங்களை தூண்டுகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2019 10:17 AM GMT



குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக சிலர் யூகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதால் கலவரங்கள் வெடித்துள்ளதாகவும், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சியினர் ஆளும் மாநிலங்களில் மட்டும் எதிர்கட்சிகள் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டி வருவதாகவும் பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.


சரியான புரிதல் இல்லாததால் எதிர்க்கட்சிகள் இதன் மூலம் மாணவர்களை போராட்டம் நடத்த தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.


“பாஜக ஆளும் மாநிலங்கள், அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் போராட்டங்கள் வெடிக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பாக நடக்கும் ஆட்சியில் கலவரத்தை உருவாக்கி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்,” என்றார் சரத்குமார்.


பல தலைமுறைகளாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை வெளியேற்றி விடுவார்கள் என்ற போலி யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடப்பது வேதனை அளிப்பதாகவும், குடியுரிமை பெற்ற இஸ்லாமியர்களை நாட்டை விட்டு கடத்த மாட்டார்கள் என்றும், அப்படி ஒரு சூழ்நிலை வந்ததால் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து தானும் போராட்டம் நடத்த தயார் என்றும் கூறினார்.


Next Story