Top
undefined
Begin typing your search above and press return to search.

"நான் ஹிந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்னிடம் பாகுபாடு காட்டியது உண்மை தான்" : டேனிஷ் கனேரியா

நான் ஹிந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்னிடம் பாகுபாடு காட்டியது உண்மை தான் : டேனிஷ் கனேரியா

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2019 1:52 AM GMT


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஒரு ஹிந்து என்பதால் அவர் மீது பாகுபாடு காட்டப்பட்டது என்று ஷோயப் அக்தர் கூறியிருந்தார். இதனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் டேனிஷ் கனேரியா.


இது குறித்து டேனிஷ் கனேரியா கூறுகையில்,"நான் ஹிந்து என்பதால் என்னுடன் பேச மறுத்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நான் வெளியிடுவேன். இதுவரை இது குறித்து பேச எனக்கு தைரியம் இருந்தது இல்லை. ஆனால் இப்போது தைரியம் வந்துவிட்டது", என்று கூறியுள்ளார்.




https://twitter.com/ANI/status/1210219133154914304?s=19


அனில் டால்பாட் என்ற வீரருக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இரண்டாவது ஹிந்து இவர் தான். சுழற்பந்து வீச்சாளரான இவர், 261 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.


யூனிஸ் கான், இன்சமாம் உள் ஹக், முஹம்மத் யூசுப், அக்தர் உள்ளிட்ட வீரர்கள் மத ரீதியாக தன்னிடம் பாகுபாடு காட்டாமல் நன்றாக பழகினார்கள் என்றும் கூறியுள்ளார்.


Next Story