Top
undefined
Begin typing your search above and press return to search.

“வைரமுத்துவின் பாலியல் பலாத்காரங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுங்கள்” – வைரமுத்துவை, தகரமுத்து ஆக்கிய சின்மயி!

“வைரமுத்துவின் பாலியல் பலாத்காரங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுங்கள்” – வைரமுத்துவை, தகரமுத்து ஆக்கிய சின்மயி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2019 10:04 AM GMT


வைரமுத்து, இந்து தெய்வங்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசவதும், எழுதுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இவர், இந்துக்கள் வழிபடும் தெய்வம் ஆண்டாளை, தேவதாசி என்று எழுதி இழிவு படுத்தினார்.


இதேபோல் “மீடூ“ விவகாரத்தின் மூலம் வைரமுத்துவின் “பொம்பள பொறுக்கி” மறுபக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரபல பின்னணி பாடகி சின்மயி உள்பட 9 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர். இதேபோல் வெளியில் சொல்லாத பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேரோ, தெரியவில்லை.


இந்த நிலையில் “இந்து விரோதி”, “பொம்பள பொறுக்கி” போன்ற பட்டங்களை சுமந்துகொண்டு திரியும் வைரமுத்துவுக்கு, பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் “டாக்கடர்” பட்டம் வழங்குகிறது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் வருகிற 28-ஆம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி வைரமுத்துவுக்கு, டாக்டர் பட்டம் வழங்குகிறார்.


இதற்கு, வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாடகி சின்மயி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், “தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ள வைரமுத்துவுக்கு, அவரின் தொடர் பாலியல் பலாத்காரத்திற்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுங்கள்” என்று வறுத்து எடுத்து உள்ளார்.




https://twitter.com/Chinmayi/status/1210159820172451840

Next Story