Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி இந்து, கிறிஸ்தவ வீரர்களுக்கு நேர்ந்த கொடுமைகள்! கண்ணீரை வரவழைக்கும் சோக சரித்திரம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி இந்து, கிறிஸ்தவ வீரர்களுக்கு நேர்ந்த கொடுமைகள்! கண்ணீரை வரவழைக்கும் சோக சரித்திரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2019 5:53 AM GMT


பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியவர், இவரது சராசரி 34.8. இவர் 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியவர், இவர்தான் டேனிஷ் கனேரியா.


இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற 2-வது இந்து வீரர். டேனிஷ் பிரபா சங்கர் கனேரியா என்பது இவரது முழு பெயர். இவர் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்திலுள்ள கராச்சியில் 1980-இல் பிறந்தார். இவரது தந்தை பெயர் பிரபாகர் சங்கர்பாய் லஜிபாய் கனேரியா. தாயார் பெயர் பபிதாபென்.


இவரது பூர்வீகம் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ஆகும். இவரது முன்னோர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே சூரத்தில் இருந்து கராச்சிக்கு இடம்பெயர்ந்து விட்டனர். (பாகிஸ்தானை துண்டாடிச் சென்ற முகமது அலி ஜின்னாவின் தாத்தா குஜராத்தை சேர்ந்த இந்து. முஸ்லிமாக மதம் மாறியபின் தந்தை லாகூருக்கு இடம் பெயர்ந்தார்.)


டேனிஷ் கனேரியா, இந்து என்கின்ற ஒரே காரணத்திற்காக உலகமறிந்த வீரரான அவருக்கு, பாகிஸ்தானில் எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டு உள்ளன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவும் கனேரியா இதுபற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோய்ப் அக்தர் இதனை போட்டு உடைத்துள்ளார்.





பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடந்த கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் சோய்ப் அக்தர், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப், ஆசிம் கமால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கிரிக்கெட் வர்ணனையாளர் நுமான் ரியாஸ் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடம் பெற்றவர்களின் விருப்பங்கள் வெறுப்புகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டன


அப்போது பேசிய சோய்ப் அக்தர் கூறியதாவது:-


டேனிஷ் கனேரியா ஒரு இந்துவாக இருந்த காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்கள் அவரை மதித்ததே இல்லை. அவருடன் அமர்ந்து சாப்பிடுவதுகூட கிடையாது. அப்படி சாப்பிடுவது அவமரியாதை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் நினைத்தார்கள். "எங்களுடன் இங்கே ஏன் அமர்ந்து சாப்பிடுகிறாய்?" என்று கேட்டார்கள். இந்த மதவெறி எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.


கனேரியாவிடம் இதுபோன்று நடந்து கொண்டால் ஒவ்வொருவரையும் இந்த அறையில் இருந்து தூக்கி எறிந்து விடுவேன் என்று கூறினேன். மேலும் கனேரியா மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். நமது அணிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் புரிய வைத்தேன். எனவே மத ரீதியாக அவரை இழிவு படுத்தவும், கொடுமை படுத்தவும் கூடாது என்றேன்.


அவர் இந்து என்ற ஒரே காரணத்திற்காக அவரை கிரிக்கெட் அணியில் வைத்திருப்பதையே பலர் விரும்பியதில்லை. ஆனால் அவர் ஒருபோதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு துரோகம் செய்ததே இல்லை. இருந்தாலும் கனேரியா மதரீதியாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார்.


இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த கிறிஸ்தவரான யூசுப் யுகானா, மதத்தின் பெயரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வந்ததார். அவர் பாகிஸ்தான் அணிக்கு கடவுள் அளித்த பரிசு. 12,000 ரன்களை அவர் குவித்த போதிலும், அவருக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுக்கவில்லை. இதனால் அழுத்தம் காரணமாக வேறுவழியின்றி அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். கட்டாயத்தின் பேரில் 2005-இல் அவர் மதம் மாறினார் என்று சொல்லலாம். அதன் பிறகு அவர் தனது பெயரை முகமது யூசுப் என்று மாற்றினார்.




https://twitter.com/AMIT_GUJJU/status/1210097589124657153




https://www.youtube.com/watch?time_continue=247&v=QtK5QStFj5E&feature=emb_logo


இவ்வாறு சோய்ப் அத்தர் கூறினார்.


பின்னர் கனேரியா, இங்கிலாந்து உள்நாட்டு அணியான எக்ஸக்ஸ் அணியில் விளையாடியபோது, கிரிக்கெட் சூதாட்டக் விவகாரத்தில் சிக்கினார். இதில் அவருக்கு இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது.


இந்த விவகாரத்தில் கனேரியா இந்து என்ற ஒரே காரணத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு உதவ முன்வரவில்லை.


மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களாக வலம் வந்த கனேரியா, யூசுப் போன்றவர்கள், அவர்கள் முஸ்லிம்களாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய கொடுமைகளை அனுபவித்து உள்ளார்கள். அப்படியானால் பாகிஸ்தானில் உள்ள சாதாரண ஒரு இந்துவோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ, எந்த மாதிரியான நெருக்கடிகளையும், கொடுமைகளையும், துன்புறுத்தல்களையும் மதத்தின் பெயரால் தினம் தினம் அனுபவித்து வருவார்கள் என்பதை சொல்ல வேண்டிய தேவை இல்லை.


இப்போது சொல்லுங்கள், தேசிய குடியுரிமை திருத்த சட்டம் தேவையா? இல்லையா?


Next Story