Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஸ்டாலினை விளாசிய அன்புமணி ராமதாஸ்!

இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஸ்டாலினை விளாசிய  அன்புமணி ராமதாஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2019 6:24 AM GMT


விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அப்போது அவர் பேசுகையில் ஸ்டாலினை கடுமையாக சாடினார், காங்கிரஸ் உடன் கூட்டணி  இருந்தபோது  இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தந்து இருக்கலாமே, என அதை செய்யவில்லை,இப்போது ஏன் எங்கள் மீது குறை சொல்கிறீர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஐநா மன்றத்தில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 50 முறை அவர்களுக்காக  போராடி வருகிறோம் நானே இரண்டு முறை சென்று இருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.  



எங்களின் நோக்கம் என்னவென்றால் இலங்கைத் தமிழர்கள் அவர்களின் மண்ணில் அவர்கள் வாழ வேண்டும் என்று தான்,  அந்த மண்ணிலே மானத்தோடு, சுயமரியாதையோடு அமைதியான முறையில், வாழவேண்டும் என்று எங்களுடைய நோக்கம் மட்டுமல்ல அவர்களின்  நோக்கம் அதுவாக தான் உள்ளது,இலங்கை குடியுரிமை சட்டத்தின் 21 ஆவது பிரிவின்படி இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றால்  இலங்கை குடியுரிமை தானாக ரத்தாகிவிடும் என தெரிவித்தார், இது எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாது எனக் கடுமையாகச் சாடினார்.




Next Story