Top
undefined
Begin typing your search above and press return to search.

“மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேட்டை கொண்டுவந்ததே, காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி அரசுதான்,” – ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிச்சாமி!

“மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேட்டை கொண்டுவந்ததே, காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி அரசுதான்,” – ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிச்சாமி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2019 11:41 AM GMT


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட மத சிறுபான்மையினர்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினர், பார்சிகள் போன்றவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுகிறது.


இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற எதிர்க்கட்சிகளும், சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும், தடைசெய்யப்பட்ட சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டி விட்டு போராட்டங்கள் என்ற பெயரில் கலவரங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த போராட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை.


மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தவறான விஷம கருத்துகளை முஸ்லிம்களிடம் பரப்பி அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததே திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.


இதுதொடர்பாக கருத்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-


மத்திய அரசு 50 வகையான காரணிகளை ஆராய்ந்து தமிழகத்திற்கு சிறந்த ஆளுமை அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத சில அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசு திட்டங்களையும், மாநில அரசு திட்டங்களையும் எதிர்த்து வருகின்றன.


மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோதுதான், 2010-ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு முறை கொண்டுவரப்பட்டது. திமுக அங்கம் வகித்த போது, இந்த திட்டத்தை அவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எதிர்க்கிறார்கள். இதற்காக மக்களை குழப்பி வருகின்றனர். இளைஞர்களும், சிறுபான்மையினரும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story