Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக காங்கிரஸ் தலைவராகும் நிலையில் இயேசு சிலை விவகாரத்தில் வகையாக சிக்கிய டி.கே.சிவகுமார்! மீண்டும் அமலாக்கத்துறை விஸ்வரூபம் !

கர்நாடக காங்கிரஸ் தலைவராகும் நிலையில் இயேசு சிலை விவகாரத்தில் வகையாக சிக்கிய டி.கே.சிவகுமார்! மீண்டும் அமலாக்கத்துறை விஸ்வரூபம் !

கர்நாடக காங்கிரஸ் தலைவராகும் நிலையில் இயேசு சிலை விவகாரத்தில் வகையாக சிக்கிய டி.கே.சிவகுமார்! மீண்டும் அமலாக்கத்துறை விஸ்வரூபம் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2019 11:29 AM GMT


கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நியமனம் செய்யப்படுவார் என நம்பகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அமலாக்கத்துறை மேலும் இரண்டு நோட்டீஸகளை அனுப்பி வைத்துள்ளது அவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.


கர்நாடக காங்கிரஸ் பிரமுகரும், அடிக்கடி நிதி முறைகேடு புகார்கள் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கிய டி.கே.சிவகுமார் கனகபுரா பகுதியில் சமீபத்தில் பிரம்மாண்ட இயேசு கிறிஸ்து சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.


இந்த இயேசு சிலை பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகளுக்கு மதிப்புள்ள அந்த நிலம் சமீபத்தில்தான் சிலை அமைத்த அமைப்பின் வசம் வந்துள்ளது.


அந்த அமைப்புக்கு இவ்வளவு மதிப்பு மிக்க சொத்து வந்தது எப்படி என்பது குறித்து கர்நாடகாவில் சர்ச்சை உருவானது. இந்த நிலையில் பாஜக மாநில அமைச்சர்கள கேஎஸ்.ஈஸவரப்பாவும் அனந்தகுமார் ஹெக்டேவும இந்த சர்ச்சைக்குரிய இடம் காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரால் சமீபத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டது என்றும் இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினர்.


இந்த நிலையில் ஏற்கனவே பல் வேறு நிதி மோசடி மற்றும் பொருளாதார வழக்குகளில் சிக்கித் தவிக்கும் டி.கே.சிவகுமாருக்கு இயேசு சிலை விவகாரத்தில் அமலாக்க துறையினர் மேலும் 2 நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நேரத்தில் சிவகுமாருக்கு இத்தகைய சங்கடங்கள் வந்துள்ளது குறித்து அவரது ஆதரவு கோஷ்டியினர் கவலை தெரிவித்து வருகின்றனராம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News