Top
undefined
Begin typing your search above and press return to search.

குடியுரிமை சட்டத்திற்கு அப்போது ஆதரவு; இப்போது எதிர்ப்பு! சிதம்பரம் மீது ஜெயக்குமார் தாக்கு!

குடியுரிமை சட்டத்திற்கு அப்போது ஆதரவு; இப்போது எதிர்ப்பு! சிதம்பரம் மீது ஜெயக்குமார் தாக்கு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2019 9:27 AM GMT


சென்னை விருகம்பாக்கத்தில் சமூகநலத் துறை சார்பாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித் தொகையும் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார்.  



மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது,எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல இப்போது நடித்தால் இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார், மேலும் தமிழகத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது, இதை திமுக ஆட்சி காலத்தில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பல்வேறு  பிரச்சினைகள் இருந்திருக்கும் என்றார்.


Next Story