Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லாம் ஆண்டாள் திருவிளையாடல்! வென்றது இந்து சக்தி! வீழ்ந்தது பெரியார் மண்! வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அம்பேல்!

எல்லாம் ஆண்டாள் திருவிளையாடல்! வென்றது இந்து சக்தி! வீழ்ந்தது பெரியார் மண்! வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அம்பேல்!

எல்லாம் ஆண்டாள் திருவிளையாடல்! வென்றது இந்து சக்தி! வீழ்ந்தது பெரியார் மண்! வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அம்பேல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2019 11:10 AM GMT


தனக்குத்தானே கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிக்கொண்ட வைரமுத்து, இந்து தெய்வங்களையும், இந்துமத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசவதும், எழுதுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இவர், தமிழாற்றுப்படை என்ற பெயரில் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அப்போது, இந்துக்கள் வழிபடும் தெய்வம் ஆண்டாளை, இழிவுபடுத்தி கட்டுரை வடித்தார்.


இது ஒட்டுமொத்த இந்துக்கள் மனதிலும் வேல் கொண்டு பாய்ச்சுவது போல் அமைந்தது. இதனால் இந்துக்கள் வைரமுத்துக்கு எதிராக கொதித்து எழுந்தனர். பல போராட்டங்களை நடத்தினர். கண்டனங்களை அழுத்தமாகப் பதிவு செய்தனர்.


அதன்பிறகும் பகுத்தறிவு என்ற போர்வையில் இந்துக்களை இழிவுபடுத்துவதை வைரமுத்து கைவிடுவதாக இல்லை. இந்து விரோத செயல்களை அவர் தொடர்ந்தார். இதனால், ஒட்டுமொத்த உலக இந்துக்களுக்கும், வைரமுத்து மீது கோபம் தணியவில்லை. மாறாக அதிகரித்தது.


இந்த நிலையில் தமிழாற்றுப்படை என்ற பெயரில் அவர் வெளியிட்ட கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டு வியாபாரம் செய்ய தொடங்கினார். இந்தப் புத்தகத்தை டிசம்பர் 3-ஆம் தேதி மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் வியாபாரம் செய்வதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்துவிட்டார்.


இதற்கிடையே இந்த தகவல், மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆண்டாள் நாச்சியாரை இழிவுபடுத்திய வைரமுத்துவை மலேசிய நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினர். மலேசியாவில் உள்ள இந்து தர்ம மாமன்றம் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து, வைரமுத்துவை மலேசியத் திருநாட்டில் நுழையவிடாமல் துரத்தியடிக்க தீர்மானித்தன. அவர்கள் கோலாலம்பூரில் உள்ள "மலேசியன் இந்தியன் காங்கிரஸ்" அரங்கத்தில் வைரமுத்துவின் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று அதன் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.


"ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்து அதற்காக மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். ஆண்டாளை, வைரமுத்து இழிவுபடுத்தி பேசியது, ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது" என்று மலேசிய இந்துக்கள் கொதித்தெழுந்தனர்.


இதேபோல் "மீடூ" விவகாரத்தின் மூலம் வைரமுத்துவின் "பொம்பள பொறுக்கி" மறுபக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரபல பின்னணி பாடகி சின்மயி உள்பட 9 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர். இதேபோல் வெளியில் சொல்லாத பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேரோ தெரியவில்லை.


இதன் காரணமாக, மணிரத்தினம் இயக்கிவரும் "பொன்னியின் செல்வன்" படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டார். 12 பாடல்கள் எழுதியுள்ள நிலையில் அவரை தூக்கி எறிந்துள்ளனர்.


இந்த நிலையில் "இந்து விரோதி", "பொம்பள பொறுக்கி" போன்ற பட்டங்களை சுமந்துகொண்டு திரியும் வைரமுத்துவுக்கு, பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த விழாவில் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி வைரமுத்துவுக்கு, டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தனர். சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் இன்று (28-ஆம் தேதி) காலை 11 மணிக்கு இதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.


இதற்காக, இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து நிகழ்ச்சியை உறுதி செய்தார் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், எம்பியுமான பச்சமுத்து என்ற பாரிவேந்தர். பட்டமளிப்பு விழாவுக்கு ராஜ்நாத் சிங்கை அழைத்த அவர், வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று, நரித்தனமாக ராஜ்நாத் சிங்கின் கையால் இந்து விரோதியும், பொம்பள பொறுக்கியுமான வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தார். இதுபற்றி ராஜ்நாத் சிங்கிடம் எதுவும் தெரிவிக்க வில்லை. அதோடு இந்த விழாவுக்கான நிகழ்ச்சி நிரலையும் ரகசியமாக வைத்துள்ளார் பச்சமுத்து.


ஆனால் கடைசி நேரத்தில், அதாவது நேற்று முன்தினம் வைரமுத்துவுக்கு ராஜ்நாத் சிங், டாக்டர் பட்டம் வழங்குவது பற்றிய செய்தி கசிந்தது. அவ்வளவுதான், இந்துக்கள் கொதித்தெழுந்தனர். இதுபற்றிய செய்திகள் வெகமாக பரவின. இதனால், இந்து அமைப்புகள், வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடக்கும் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.


இந்த பிரச்சினையை, இந்து அமைப்புகளின் தலைவர்கள், ராஜ்நாத் சிங் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவரிடம் வைரமுத்துவின் இந்து விரோத செயல்களையும், அன்னை ஆண்டாளை அவர் இழிவு படுத்தியதையும் எடுத்துக் கூறினர். அதோடு "மீடூ" விவகாரத்தில் பாடகி சின்மயி உள்பட 9 பெண்கள் புகார் அளித்துள்ளதையும், வைரமுத்துவின் பொம்பள பொறுக்கி தனத்தையும் பட்டியலிட்டனர்.


இதனைத்தொடர்ந்து வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவுக்கு வருவதை ராஜ்நாத் சிங் ரத்து செய்தார்.


இதனால் நரித்தனமாக ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து, அவரது கையால் அன்னை ஆண்டாளை இழிவு படுத்திய இந்து விரோதி வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க பச்சமுத்து போட்டிருந்த திட்டம் தவிடுபொடியானது.


இந்த நிலையில் இந்த சம்பவம் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கே பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. எனவே பல்கலைக் கழகத்தின் மானத்தைக் காப்பாற்ற வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் திட்டத்தையே கைவிட்டார், பச்சமுத்து.




https://twitter.com/SuryahSG/status/1210596077713276928


அப்போதும்கூட, "கவிழ்ந்து விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல, வைரமுத்து தானாகவே டாக்டர் பட்டம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக செய்தி பரவிவிட்டு உள்ளார், தகரமுத்துவாக மாறிய வைரமுத்து. மத்தியில் திமுக அங்கம் வகித்தபோதெல்லாம், தேசிய விருதை மிரட்டி பறித்து வந்த வைரமுத்துவின் பித்தலாட்டம் தெரியாதவர்கள் வேண்டுமானால், இதை நம்பலாம். ஆனால் அவரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு?


எல்லாம் அன்னை ஆண்டாள் செயல்!


இது ஆண்டாளுக்கான மார்கழி மாதம்!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News