Top
undefined
Begin typing your search above and press return to search.

மொத்த ஓட்டு- 785; நாடார் ஓட்டு – 779; தலித் ஓட்டு -6; ஆனால், பஞ்சாயத்து தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கீடு! கிராமமே தேர்தல் புறக்கணிப்பு! கனிமொழியின் தொகுதியில்தான் இந்த கேலிக்கூத்து!

மொத்த ஓட்டு- 785; நாடார் ஓட்டு – 779; தலித் ஓட்டு -6; ஆனால், பஞ்சாயத்து தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கீடு! கிராமமே தேர்தல் புறக்கணிப்பு! கனிமொழியின் தொகுதியில்தான் இந்த கேலிக்கூத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2019 7:14 AM GMT


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி நாடார் சமுதாயத்தவர் மிகப் பெரும்பான்மையாக உள்ள தொகுதி. இதனால் இந்த தொகுதி நாடார் தொகுதி என்று முத்திரை குத்தப்பட்டு இருந்தது. இந்த பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தப்படும் அனைத்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் நிறுத்தப் பட்டாலும் அவர்கள் வெற்றி பெற்றது இல்லை.


ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் கனிமொழி திமுக சார்பில் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார். அப்போது நாடார் சமூக மக்களிடையே அச்சம் நிலவியது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி, தனி தொகுதியாக மாற்றப்படலாம் என்பதுதான் அவர்களின் அச்சமாக இருந்தது. இதனை நிரூபிக்கும் வகையில் அப்போது சில ஆடியோக்கள் வைரலாக பரவின. அந்த ஆடியோக்களில் பேசியவர்கள், "இந்த முறை கனிமொழி வெற்றி பெற்றால் மட்டுமே இந்தத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்படும். எனவே கனிமொழிக்கு வாக்களியுங்கள்" என்று பிரச்சாரம் செய்தனர்.


இந்த நிலையில், கனிமொழியின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிச்சிவிளை பஞ்சாயத்து தலைவர் பதவி முதல் முறையாக தனித் தொகுதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அங்கு வாழும் நாடார் சமுதாயத்தினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பிச்சிவிளை பஞ்சாயத்தில், மொத்தம் 785 ஓட்டுகள் உள்ளன. இதில் 779 ஓட்டுகள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவை. 6 ஓட்டுகள் மட்டுமே ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவை.





ஆதி திராவிடர்களுக்கோ அல்லது மலை ஜாதியினருக்கோ ஒரு தொகுதியை ஒதுக்கும்போது, அந்த குறிப்பிட்ட தொகுதியில் உள்ள, அந்த குறிப்பிட்ட ஜாதியினரின் கணிசமான எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் வெறும் 6 ஓட்டுகள் மட்டுமே உள்ள பிச்சிவிளை பஞ்சாயத்து தலைவர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் நாடார் சமுதாய மக்கள், தேர்தலைப் புறக்கணித்து உள்ளனர். பிச்சிவிளை பஞ்சாயத்திற்கு உள்பட்ட 6 வார்டுகளிலும் ஒருவர்கூட போட்டியிட வில்லை.


இந்த நிலையில் நேற்று (27.12.2019) அங்கு தேர்தல் நடந்தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 6 பேரும் ஓட்டு போட்டனர். நாடார் சமுதாயத்தில் இருந்த யாரும் வாக்களிக்கவில்லை. அங்கு அமைக்கப்பட்டிருந்த மொத்தம் 3 வாக்குச்சாவடிகளில், 2 வாக்குச் சாவடிகளில் அந்த 6 ஓட்டுகளும் பதிவாகின. மற்றொரு வாக்குச்சாவடியில் ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை.


தேர்தலை முன்னிட்டு பிச்சிவிளை கிராமமே சோகத்தில் மூழ்கியது. அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி கடடப்பட்டு இருந்தன் தெருக்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. ஓட்டுச்சாவடிகள் வாக்குப்பதிவு அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலையில் வெறிச்சோடின.


பிச்சிவிளை பஞ்சாயத்தை திட்டமிட்டு தனித் தொகுதியாக அறிவித்துள்ளனர் என்கின்றனர் அந்த கிராமத்தை சேர்ந்த நாடார் சமுதாய பெரியவர்கள். இதன் பின்னணியில்அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் அதிகாரிகளும் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப் படும் அபாயம் இருப்பதாக நாடார் சமுதாய மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கூறும்போது, “தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழியை வெற்றி பெற்ற போதே, இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். அது இப்போது நடந்துள்ளது" என்றார்.


ஜாதி பாகுபாடு இல்லாமல் அண்ணன் – தம்பிகளாக வாழும் மக்களிடையே, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை களைகிறோம் என்ற போர்வையில் சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதுவது என்பது இதுதான்.


Next Story