Top
undefined
Begin typing your search above and press return to search.

“நாங்கள் எங்கு செல்வோம்?” - பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்ட இந்து அகதிகள் கேட்கிறார்கள்!

“நாங்கள் எங்கு செல்வோம்?” -  பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்ட இந்து அகதிகள் கேட்கிறார்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2019 12:31 PM GMT


மோடி அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட மத சிறுபான்மையினர்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினர், பார்சிகள் போன்றவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுகிறது.


இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற எதிர்க்கட்சிகளும், சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும், தடைசெய்யப்பட்ட சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டி விட்டு போராட்டங்கள் என்ற பெயரில் கலவரங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த போராட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை.


இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் இருந்து வந்துள்ள இந்து அகதிகள், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமைதியான முறையில் பேரணி நடத்தினார்கள். அப்போது, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை, உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு அகதிகளாக வந்து டெல்லியில் தஞ்சமடைந்துள்ள தரம்வீர் கூறும்போது, “பாகிஸ்தானின் முஸ்லிம்களின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ளமுடியாமல், எங்களது சொத்துக்களையெல்லாம் விட்டு விட்டு, இங்கே வந்துள்ளோம். இங்கே எங்களுக்கு குடியுரிமை வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. இந்த நிலையில் சிலர் எங்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்று கூறுகின்றனர். இங்கு எங்களுக்கு அடைக்கலம் இல்லை என்றால் நாங்கள் எங்கு செல்வோம்?” என்றார்.


மற்றொரு இந்து அகதியான தாராசந்த் கூறும்போது, “நாங்கள் ஊடுருவல் காரர்கள் அல்ல. முறையாக இந்தியாவுக்கு வந்த அகதிகள். எதிர்க்கட்சியினர் எங்களை சந்தேகப்படுகின்றனர். நாங்கள் இங்கு வராவிட்டால் வேறு எங்கே செல்வோம்? எங்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அவர்களிடம் நாங்கள் கேட்பது, இந்த சட்டத்தை நீங்கள் எதிர்க்க வேண்டாம். எங்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான்” என்று குறிப்பிட்டார்.


Next Story