Top
undefined
Begin typing your search above and press return to search.

10 லட்சம் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துள்ள கம்யூனிஸ்ட் சீனா அரசு- பதறவைக்கும் சம்பவம் !

10 லட்சம் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துள்ள கம்யூனிஸ்ட் சீனா அரசு- பதறவைக்கும் சம்பவம் !

saravanaBy : saravana

  |  30 Dec 2019 1:43 AM GMT


உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் முதன்மை பெற்றிருக்கும் நாடு சீனா இங்கு முஸ்லீம் மக்கள் பெருகுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கட்டாயமாக மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறது. குர்ரான் மாற்றி எழுதப்படுகிறது. அகதிகள் போல் நடத்தி வருகிறது.


இந்த நிலையில் சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமனா சிஞ்ஜியாங்கில் தங்களின் மதங்களின் அடிப்படையில் வாழ்ந்து வரும் மக்களில் அதிகமானோர் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர்.


சிஞ்ஜியாங் மாகாணத்தில் பாதுகாப்புக்காக ராணுவத்தினரை குவித்து வைத்துள்ளது சீனா. 10 லட்சம் இஸ்லாமியர்களை ஆண்களையும், பெண்களையும் பிரித்து, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியுள்ளது அதுமட்டுமில்லாமல் அவர்களின் குழந்தைகளை தனியாக பிரித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்வாறு, பெற்றோர் இருந்தும் தனித்துவிடப்பட்டுள்ள இஸ்லாம் குழந்தைகளில்,முதற் கட்டமாக 6 லட்சம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து உறைவிட பள்ளிக்கு அனுப்பியுள்ளது மேலும், 5 லட்சம் குழந்தைகளை , உறைவிட பள்ளிகளுக்கு, சீன அரசாங்கம் அனுப்ப உள்ளதாககவும் தகவல் வெளியாகியுள்ளது. மத அடையாளத்துடன் வாழும் மக்களை ஒடுக்கி வரும் சீனா


Next Story