Top
undefined
Begin typing your search above and press return to search.

திருப்பூர் குலுங்கியது! தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக இந்துக்கள் மாபெரும் பேரணி!

திருப்பூர் குலுங்கியது! தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக இந்துக்கள் மாபெரும் பேரணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 5:07 AM GMT



நரேந்திர மோடி அரசு, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் இருந்து, முஸ்லிம் மத வெறியர்களால் துன்புறுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.


இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் வசித்துவரும் எந்த ஒரு மத பிரிவினருக்கும், எந்தவிதமான ஆபத்தும் இல்லை. இந்த சட்டம் முழுக்க முழுக்க மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த மத சிறுபான்மையினருக்கானது. 
இது மிகத் தெளிவாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அமைப்புகளின் தலைவர்களுக்கும் தெரிந்திருந்த போதிலும், உள்நோக்கத்தோடு, அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களை தூண்டிவிட்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சியினர் குளிர்காய்ந்து வருகின்றனர். பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருகின்றன. அவர்களின் ஒட்டுமொத்த நோக்கமும் இந்தியாவில் மத ரீதியிலான கலவரங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே.





இதற்காக நாடு முழுவதும் முஸ்லிம்களை தூண்டிவிட்டு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகின்றனர். கலவரங்களையும் அரங்கேற்றி வருகின்றனர்.


இந்த நிலையில் தேசியக் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் நகரில் இந்துக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணியை நடத்தி உள்ளனர். 10,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் அணி திரண்டு வந்தனர். ஐந்து வயது முதல் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை, ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். இதனால் திருப்பூர் நகர் குலுங்கியது.




https://twitter.com/SuryahSG/status/1211293346708086784


திருப்பூரில் உள்ள கொடிகாத்த குமரன் சிலை முன்பிருந்து இந்த பேரணி தொடங்கியது. திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் அருகே இந்த பிரமாண்ட பேரணி நிறைவடைந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநில செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.




https://twitter.com/hmrss1980/status/1211309929799094275




https://twitter.com/hmrss1980/status/1211270812411367424



Next Story