Top
undefined
Begin typing your search above and press return to search.

போராட்டங்களில் "லா இலாஹ இல்லல்லாஹ்" கோஷத்துக்கு சசிதரூர் எதிர்ப்பு! முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் வன்முறையை தூண்டும் பதிலடி!

போராட்டங்களில் லா இலாஹ இல்லல்லாஹ்  கோஷத்துக்கு சசிதரூர் எதிர்ப்பு!  முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் வன்முறையை தூண்டும் பதிலடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 5:34 AM GMT



குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகளும், எதிர்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டி நடத்தி வருகின்றன.


கேரளாவிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களின் போது போது முஸ்லிம்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற கோஷத்தை ஒலிக்கிறார்கள். உண்மையில் இதன் பொருள் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதுதான்.


இந்த நிலையில் அடிக்கடி சர்ச்சைப் பேச்சு பேசி வரும் திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் "லா இலாஹ இல்லல்லாஹ்" கோஷத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில் " ஹிந்துத்வா அடிப்படைவாதிகளை எதிர்த்து நாம் போராடுகையில் நம் கவனம் இது போன்ற கோஷங்களைப் போடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது திரும்பிவிடக் கூடாது. CAA மற்றும் NRC யால் முஸ்லிம்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நமது இந்த உரிமை போராட்டம். இதை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் வன்முறை நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது " என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.


சசிதரூரின் இந்த எச்சரிக்கை கருத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் சமூக ஊடகங்கள் மூலமாக கண்டனம் தெரிவித்து வருவதுடன் சசி தரூர் உறுதியற்றவர், "லா இலாஹ இல்லல்லாஹ்" கோஷத்தை நாம் எந்த நிலையிலும் நிறுத்தி விடக் கூடாது. கண்ணீர் புகை குண்டுகள் மத்தியிலும் இந்த கோஷத்தை விடக் கூடாது என வன்முறையை மேலும் தூண்டும் விதத்தில் தகவல்களை பரப்பி வருகின்றன.


Next Story