Kathir News
Begin typing your search above and press return to search.

உயிரை பறித்த ரயில் சாகசம்! 3 ஆண்டுகளில் 50,000 பேர் பலி! வைரலானது வீடியோ!

உயிரை பறித்த ரயில் சாகசம்! 3 ஆண்டுகளில் 50,000 பேர் பலி! வைரலானது வீடியோ!

உயிரை பறித்த ரயில் சாகசம்! 3 ஆண்டுகளில் 50,000 பேர் பலி! வைரலானது வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 12:39 PM GMT



கவனக்குறைவுகளாலும், சாகசங்களினபலும் ரயில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மத்திய ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.


கடந்த 26-ஆம் தேதி, மும்பையில் தில்ஷன் என்ற 20 வயது வாலிபர் ஓடும் ரயிலின் வாசலில் தொங்கியபடி பயணம் செய்தார். அவர் ரயில்வே பாலம் ஒன்றில் மோதி மரணமடைந்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சாகசம் என்ற பெயரில் தில்சன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.




https://twitter.com/RailMinIndia/status/1211528262255427584


தில்ஷனைப் போன்று இந்த ஆண்டில் மட்டும் மும்பையில் 4 பேர் ஓடும் ரயிலில் சாகசம் செய்து பலியாகியுள்ளனர். இதுபோல இந்தியா முழுவதும் ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் தங்களுடைய உயிரை பலியாகி வருகின்றனர்.


சட்டப்படி இது தவறு என்று தெரிந்தும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று உணர்ந்தும், தில்சனைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் சாகசம் என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.


இது ஒருபுறமிருக்க, கவனக் குறைவால் தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு உயிரை விடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளன. சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம் என்று ரயில்வே துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தபோதிலும், தண்டவாளத்தைக் கடப்பதும் தொடர்கதையாகதான் இருந்து வருகிறது. நடை பாலத்தை பயன்படுத்துவதால் சிறிது தாமதம் ஆகும். ஆனால் தண்டவாளத்தை கடப்பதால் அது உயிருக்கு உலை வைக்கும்.






கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை, ரயில் தண்டவாளங்களை கடந்த வகையிலும், ஓடும் ரயிலில் சாகசங்கள் செய்த வகையிலும் 49,790 பேர் பலியாகி உள்ளனர்.


கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20000 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
வடக்கு ரயில்வேயில் 7,908 பேரும் தென்னக ரயில்வேயில் 1,549 கிழக்கு ரயில்வேயில் 5,670 பேரும் பரி ஆகி உள்ளனர்.


கடந்த ஆண்டு மட்டும் தண்டவாளத்தை கடந்தது உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 1,75,996 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 4.35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News