Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் வன்முறையை தூண்டும் பிரச்சாரம்: பாகிஸ்தான் ரேடியோவுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை!

காஷ்மீரில் வன்முறையை தூண்டும் பிரச்சாரம்: பாகிஸ்தான் ரேடியோவுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 6:56 AM GMT



பாகிஸ்தான் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனன் (பிபிசி) பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானது. தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் “பாகிஸ்தான் ரேடியோ நிறுவனம்’ தனது பெயரில் பதிவுகளை இட்டு வருகிறது.


சமீபத்தில் அந்த பதிவுகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் ஆய்வு செய்ததில் அதன் பெரும்பாலான பதிவுகள் ‘காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்’ என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான சம்பவங்கள், போலியான காட்சிகள் இடம் பெறுவதாகவும், வன்முறையை தூண்டும் சில ஆபத்தான நபர்களின் பதிவுகள் இடம் பெறுவதும் தெரிய வந்தது.


இதை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது நூலில் பாகிஸ்தான் ரேடியோ பதிவிடமுடியாத வகையில் தடை செய்துள்ளது. மேலும் பேஸ்புக் விதிகள்படி, இது ஆபத்தான நபர்கள் மற்றும் அமைப்புகள் மீதான சமூக தரங்களை மீறியது எனவும் பாகிஸ்தான் குறித்து குற்றம் சாட்டியுள்ளது.


இது பற்றி ரிபப்ளிக் பத்திரிகை தனது செய்தி ஒன்றில் கூறுகையில் “ரேடியோ பாக்கிஸ்தான் தொடர்ந்து செய்து வந்த விஷமப் பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரேடியோ பாகிஸ்தானின் பல இடுகைகளையும் பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. சமீபத்தில் இது புர்ஹான் வாணி மற்றும் ஜாகிர் மூசா போன்ற பயங்கரவாதிகளைப் பாராட்டியதோடு அவர்களை ‘தியாகிகள்’ என்று இந்த வானொலி அழைத்தது என்றும் ரிபப்ளிக் கூறியுள்ளது.


Next Story