Top
undefined
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவரான கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி, எஸ்.சி. கோட்டாவில் வேலையில் சேர்ந்ததும், பதவி உயர்வு பெற்றதும் அம்பலம்!

கிறிஸ்தவரான கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி, எஸ்.சி. கோட்டாவில் வேலையில் சேர்ந்ததும், பதவி உயர்வு பெற்றதும் அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Dec 2019 9:53 AM GMT


கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருப்பவர் ராஜ கிருபாகரன். கிறிஸ்தவரான இவர், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழ் கொடுத்து பட்டியலின இட ஒதுக்கீட்டில், வேலையில் சேர்ந்துள்ளார். அதோடு பட்டியலின இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பதவி உயர்வும் பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இவர் இப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை பெறுவதற்கும், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழை பயன்படுத்தி பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வுக்காக காத்து இருக்கிறார்.





இந்த நிலையில் ராஜ கிருபாகரன், கோப்புகளில் கையெழுத்து போடுவதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோப்புகள் மலைபோல் குவிந்து உள்ளன.


இதுபற்றி ராஜ கிருபாகரன் தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் கூறும்போது, “பட்டியலின அதிகாரிகள் பட்டியலில் எனது பெயர் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. எனக்கு விரைவில் ஐ .ஏ .எஸ் பதவி கிடைக்க உள்ளது. இந்த நிலையில், தேவை இல்லாமல் கோப்புகளில் கைழுத்து போட்டு மாட்டிக்கொள்ள மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.


இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடும் கோபத்தில் உள்ளார். இது தொடர்பாக பல முறை எச்சரித்தும் ராஜ கிருபாகரன் கண்டுகொள்ளவில்லை.





கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “ஒரு கோப்பில்கூட கையெழுத்திடாத அதிகாரி” என்ற பெயரை ராஜ கிருபாகரன் பெற்றுள்ளார் என்கின்றர் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள்.


ராஜ கிருபாகரனின் இந்த செயலால், கடலூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உள்ளவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.


“இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளது மட்டுமல்லாமல் பதவி உயர்விலும் போலி சான்றிதழ் கொடுத்து வருவதால், உண்மையான இந்த ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த அதிகாரிகளின் உரிமைகளை ராஜ கிருபாகரன் தட்டி பறித்து வருகிறார். இது இந்து ஆதிதிராவிட மக்களிடையே கடும் கோபத்தை ஏறடபடுத்தி உள்ளது.





ராஜ கிருபாகரன் போன்ற மோசடி பேர்வழிகள் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து, உண்மையான இந்து ஆதிதிராவிடர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


செய்வாரா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?


Next Story