Kathir News
Begin typing your search above and press return to search.

வீடு முற்றுகை; கைது செய்ய போலீசார் தீவிரம்! மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் நெல்லை கண்ணன்!

வீடு முற்றுகை; கைது செய்ய போலீசார் தீவிரம்! மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் நெல்லை கண்ணன்!

வீடு முற்றுகை; கைது செய்ய போலீசார் தீவிரம்! மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் நெல்லை கண்ணன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Dec 2019 11:42 AM GMT


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கலவரத்தை தூண்டி வருகின்றன. இதற்கு உறுதுணையாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான சிமி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் இப்போது களமிறங்கியுள்ளனர்.


திமுக, திக, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் உள்பட தமிழகத்திலுள்ள தேச விரோத கும்பல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலவரத்தை தூண்டி வருகின்றன.



நெல்லை மேலப்பாளையத்தில் இந்த கும்பல்கள; இணைந்து தேச விரோத கருத்துக்களை பரப்பியது. இவர்களுடன் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், இந்து விரோதியுமான காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணனும் இணைந்து தேச விரோத விஷத்தை கக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான எஸ்.டி.பி.ஐ ஏற்பாடு செய்துள்ளது.



வீடு முற்றுகை; கைது செய்ய போலீசார் தீவிரம்! மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் நெல்லை கண்ணன்!



இதில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கேவலமாக விமர்சித்து உள்ளார். அந்த மேடையில் இருந்த முஸ்லிம்களைப் பார்த்து, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை” என்று கேட்டுள்ளார். “நீங்கள், அமித்ஷாவை கொலை செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் நீங்கள் இன்னும் செய்யவில்லை” என்று முஸ்லிம்களை தூண்டிவிட்டு பேசியுள்ளார்.


நெல்லை கண்ணன் இப்படி பேசியபோது அதை மேடையில் இருந்த எந்த ஒரு முஸ்லிமும் கண்டிக்கவில்லை. மாறாக அனைவரும் அதை வரவேற்று சிரித்துள்ளனர். இதில் பெண்களும் அடக்கம்.


அதோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரையும் கேவலமாக விமர்சித்துள்ளார். “நான் இந்து இல்லை” என்று அந்த முஸ்லிம்களிடம் சொல்லி பெருமைப்பட்டுள்ளார். இந்து மதத்தை வைத்தே இதுவரை பிழைப்பு நடத்திய, நெல்லை கண்ணன், அந்த மேடையில் இந்து மதத்தையும் அவமதித்து பேசியுள்ளார்.



வீடு முற்றுகை; கைது செய்ய போலீசார் தீவிரம்! மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் நெல்லை கண்ணன்!


நெல்லை கண்ணனின் இந்த பேச்சு அடங்கி வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்த ஒட்டு மொத்த தமிழர்களும் வெகுண்டெழுந்தனர். அவர்கள் புகார்களை தொடந்து அளித்து வருகின்றனர். காவல் நிலையங்களிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களிலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.




https://twitter.com/HRajaBJP/status/1211583682198171649




https://twitter.com/VanathiBJP/status/1211614767179165697


இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது எப்.ஐ.ஆர் என்று சொல்லப்டுகின்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 504, 505, 505/2, பொது அமைதியை குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தூண்டி விடுதல், இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுது, ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் நெல்லையில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டை, முருகதாஸ் தலைமையில் பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக, பாளையங்கோட்டை பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் அ.தி.மு.க.வினர் நெல்லை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை இழிவாக பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


நெல்லை கண்ணனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அநேகமாக தீபாவளியை திகார் ஜெயிலில் கொண்டாடிய ப.சிதம்பரத்தை போன்று, ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை பாளையங்கோட்டை ஜெயிலில் நெல்லை கண்ணன் கொண்டாடுவார் என்று தெரிகிறது.


இதற்கிடையில் கைதாகும் நிலை ஏற்பட்டதைத்தொடர்ந்து, நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று நெல்லை கண்ணன் படுத்துக்கொண்டார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.


எல்லாம் அந்த ஆண்டாள் செயல்!


ஆமாம், இது ஆண்டாளுக்கான மார்கழி மாதம், இந்து விரோதிகள் ஒவ்வொருவராக தண்டிக்கப்படுகின்றனர்!


முதலில் வைரமுத்து, இப்போது நெல்லை கண்ணன், அடுத்து...?


இன்னும் 15 நாட்கள் உள்ளன!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News