Kathir News
Begin typing your search above and press return to search.

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி மெரினாவில் பா.ஜ.க தர்ணா! – பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் கைது!

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி மெரினாவில் பா.ஜ.க தர்ணா! – பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் கைது!

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி மெரினாவில் பா.ஜ.க தர்ணா! – பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jan 2020 12:07 PM GMT


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கலவரத்தை தூண்டி வருகின்றன. இதற்கு உறுதுணையாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான சிமி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் இப்போது களமிறங்கியுள்ளனர். திமுக, திக, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் உள்பட தமிழகத்திலுள்ள தேச விரோத கும்பல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலவரத்தை தூண்டி வருகின்றன.



நெல்லை மேலப்பாளையத்தில் இந்த கும்பல்கள் இணைந்து தேச விரோத கருத்துக்களை பரப்பியது. இவர்களுடன் பிரபல பேச்சாளரும், இந்து விரோதியுமான காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணனும் இணைந்து தேச விரோத விஷத்தை கக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான எஸ்.டி.பி.ஐ ஏற்பாடு செய்துள்ளது.



இதில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடியை மிகக்கேவலமாக விமர்சித்து உள்ளார். அந்த மேடையில் இருந்த முஸ்லிம்களைப் பார்த்து, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை” என்று கேட்டுள்ளார். “நீங்கள், அமித்ஷாவை ஜோலியை முடிப்பீர்கள் (கொலை செய்வீர்கள்) என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் நீங்கள் இன்னும் செய்யவில்லை” என்று முஸ்லிம்களை தூண்டிவிட்டு பேசியுள்ளார்.


நெல்லை கண்ணன் இப்படி பேசியபோது அதை மேடையில் இருந்த எந்த ஒரு முஸ்லிமும் கண்டிக்கவில்லை. மாறாக அனைவரும் அதை வரவேற்று சிரித்துள்ளனர். இதில் பெண்களும் அடக்கம்.


அதோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரையும் கேவலமாக விமர்சித்துள்ளார். “நான் இந்து இல்லை” என்று அந்த முஸ்லிம்களிடம் சொல்லி பெருமைப்பட்டுள்ளார். இந்து மதத்தை வைத்தே இதுவரை பிழைப்பு நடத்திய, நெல்லை கண்ணன், அந்த மேடையில் இந்து மதத்தையும் அவமதித்து பேசியுள்ளார்.


நெல்லை கண்ணனின் இந்த பேச்சை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. கமிஷனர் அலுவலகங்களிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. எனவே நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினா கடற்கரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த தர்ணா போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.




https://twitter.com/VanathiBJP/status/1212324365468962819


இதனால் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டன.




https://twitter.com/PonnaarrBJP/status/1212332309791199234


பின்னர் அவர்கள் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.




https://twitter.com/PonnaarrBJP/status/1212333439313039360


நெல்லை கண்ணன் கைது செய்யப்படாவிட்டால், போராட்டம் தொடரும் என்று ஹெச்.ராஜா அறிவித்துள்ளார்




https://twitter.com/HRajaBJP/status/1212328443121004544

Next Story
கதிர் தொகுப்பு
Trending News