Top
undefined
Begin typing your search above and press return to search.

CAA-க்கு ஆதரவாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை, களம் இறங்கிய இந்துப் பெண்கள்! “மூலப்பத்திரம் எங்கே?” என்பது முக்கிய இடம் பிடித்தது!

CAA-க்கு ஆதரவாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை, களம் இறங்கிய இந்துப் பெண்கள்! “மூலப்பத்திரம் எங்கே?” என்பது முக்கிய இடம் பிடித்தது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jan 2020 10:01 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம் மத வெறியர்களால் அடித்துத் துரத்தப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்டுகள் போன்ற கட்சிகள் நாடு முழுவதும் கலவரங்களை தூண்டி வருகின்றன.





இந்த சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பது தெரிந்திரிந்தும் சில முஸ்லீம் பயங்கரவாத அமைப்பினரும், பல முஸ்லிம் தலைவர்களும் இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு துரத்தி அடிக்க போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.







https://twitter.com/VanathiBJP/status/1212291101249306624





தமிழகத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மை மக்களிடம் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பெருத்த ஆதரவு உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்தி, திமுக போராட்டங்களை நடத்தி வருகின்றது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சிகளும், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.





இவர்களின் போராட்டங்களில் ஒன்றாக கோலம் போடும் போராட்டத்தை கையில் எடுத்தனர். இது மார்கழி மாதம் என்பதால் இந்துக்கள் தங்களின் வீடுகளின் முன்பாக கோலம் போடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி இந்துக்கள் போட்டு உள்ள கோலத்தின் அருகே, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களை எழுதி திமுகவினர் தங்களின் களவாணி தளத்தை அரங்கேற்றினர்.





அதோடு பல இடங்களில் கோலம் வரைந்த பெண்களிடம் 200 ரூபாயை கொடுத்து அதனருகே தேச விரோதக் வாசகங்களை எழுத தூண்டியுள்ளனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, திமுக இளைஞரணி செயலாளர் கனிமொழி வீடு போன்றவற்றின் முன்பு கோலங்கள் வரையும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.





இந்த நிலையில் திமுக கும்பலின் கோலம் வரையும் போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை தமிழகம் முழுவதும் இந்து பெண்கள் தாங்கள் வரைந்த கோலத்தில் அருகே தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான வாசகங்களை எழுதி உள்ளனர்.








அதோடு பல வீடுகளில் போடப்பட்டுள்ள கோலங்களில் "மூலப் பத்திரம் எங்கே?" என்ற வாசகம் இடம்பெற்றது. இது பலரின் கவனத்தை ஈர்த்தது. இதன்மூலம் இதுவரை கிராமப்புறங்களில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது இடம் பஞ்சமி நிலம் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது பாமர மக்களுக்கும் அது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













Next Story