Top
undefined
Begin typing your search above and press return to search.

தலைமை பண்பின் தனித்த அடையாளம் தோனி என்னும் தலைவரிடம் கற்க வேண்டிய பாடங்கள் என்ன..?

தலைமை பண்பின் தனித்த அடையாளம் தோனி என்னும் தலைவரிடம் கற்க வேண்டிய பாடங்கள் என்ன..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jan 2020 3:50 AM GMT


இந்திய
கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான பக்கங்களை எழுதியவர். இவர் தலைமையின் கீழான அணி
அடித்து நொருக்கிய சாதனைகள் ஏராளம். இவருடைய வெற்றிக்கு பலரும், அதிர்ஷ்டம்,
நல்ல நேரம் என வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்தாலும் இவருடைய
தனித்தன்மை தனித்து தெரிவது தான் இவரின் வெற்றி.


பல
பல்கலைகழகங்கள், பெரும் நிறுவனங்கள் மேலும் தலைமை பண்பில் தலைசிறந்து மிளிர நினைக்கிற
யாவருக்கும் இவரிடம் கற்க பல பாடங்கள் உண்டு... இவருடைய ஆர்வலர் திரு. கே. சுதர்ஷனன்
அவர்கள் இவருடைய தலைமைபண்பை குறித்து ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை அனைவராலும்
பெரிதும் வரவேற்க பட்டது. அதன் சாரம் இங்கே....


பின்புலம்
சாரா நம்பிக்கை


மிகவும் எளிமையான
பின்புலத்தை கொண்டிருந்தாலும் அதை ஒருபோதும் தன் வளர்ச்சிக்கான
தடையாக அவர் கருதியதேயில்லை. மேலும் அந்த பின்புலத்தையே தன்னுடைய சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான உந்து சக்தியாக அவர் பயன்படுத்தினார்.


நாம்
செயல்படுகிற இடத்தில் பெரும்பாலும் நம்முடைய பின்புலத்தை வைத்தே மதிப்பிடப்படுகிற
வேளையில். நம் பலத்தை மட்டுமே நம்பி அந்த அசாதாரணமான சூழலை தைரியத்துடன், நம்பிக்கையுடன்
எதிர்கொண்டாலே பாதி களத்தை நாம் வென்றுவிடலாம்.


பிறரின்
ஆளுமையை மேலாண்மை செய்வது


தோனி
கேப்டனாக அறிவிக்கப்பட்ட சமயம் பெரும் புகழும் அனுபவமும் மிக்க முன்னனி வீரர்கள்
அணியில் இருந்தனர். அப்போது நடப்பில் இருந்த முறைகளை அவர் மதித்தார். அதில்
மாற்றம் கொண்டுவதற்கு போதுமான நேரத்தை எடுத்து கொண்டார். அங்கிருந்த அனுபவமிக்க
ஆளுமைகளை சரியாக கையாண்டர்.


இன்று
எளிதில் தலைமை பொறுப்பிற்க்கு வந்துவிடுகிற எவரும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது.
அவர் மாற்றாங்களை அறிவிக்க பதற்றம் காட்டவில்லை. தன்னுடைய முத்திரையை பதிக்க
அவசரம் கொள்ளவில்லை. மாறாக தன்னுடைய ஆற்றலை வல்லமையை மெல்ல மெல்ல அனைவரிடத்திலும்
பதிய வைத்தார். அனுபவமிக்க வீரர்களிடமிருந்து போதிய கற்றலை பெற்று கொண்டார்.


வெற்றியை
கையாளுதல்


தோனி
தன்னுடைய துவக்க காலத்திலேயே பெரும் புகழையும் பொருளையும் ஈட்ட துவங்கினார். ஆனால்
அந்த அரம்பகால வெற்றியை போதிய முதிர்ச்சியுடன் அவர் கையாண்டர்... தன் கால்களை
உறுதியாக நிலத்தில் பதித்தார்.. அந்த நிதானம் மேலும் அவரை உச்சத்திற்க்கு இட்டு
சென்றது. பெரும் பொருளையும் கண் கூசும் புகழையும் தாங்கி கொள்வதற்கும் கையாள்வதற்க்கும்
அலாதியான முதிர்ச்சியும் பணிவும் வேண்டும்
அது அவரிடம் இருந்தது.


இன்று
பெரும்பாலன இளைய தலைவர்கள் உணர வேண்டிய பாடமிது. விரைவான வெற்றியால் தன்
நடத்தையில் பழக்க வழக்கங்களில் உடனடி மாற்றத்தை கொண்டு வருவதல்ல முதிர்ச்சி.
பெரும்பாலான இளைஞர்கள் விரைவாக அடைந்த வெற்றியால் தன்னிலை மறந்து கட்டுபாடற்ற
தன்மையால் அடைந்த இடத்தை எளிதில் தொலைத்து விடுக்கூடும்.


ஆனால்
அதற்கு விதிவிலக்கு தோனி.


அழுத்தத்தை
கையாள்வது.


வெற்றியென்றால்
கோவில் கட்டுவது, தோல்வி கண்டால் கொதித்தெழுவது உணர்ச்சி கரமான ரசிகர்களை கொண்டது இந்திய
அணி. ஒவ்வொறு முறை ஆடுகளத்தில் நிற்கிற பொழுதும் வெற்றிக்கான பெரும் அழுத்தத்தை
சுமந்து கொண்டே அவர் நின்றிருக்க வேண்டும். ஆனால் அதை ஒரு போதும் தன் குழுவிற்க்கு
அவர் கடத்தியதேயில்லை.


ஆடுவதற்கான்
நம்பிக்கையை, தங்கள் சிறப்பை வெளிக்கொணர்வதற்கான தாக்கத்தை குழுவினர் தலைவரிடமிருந்தே
பெற முடியும். அந்த தாக்கத்தை வழங்குபவரே சிறந்த தலைவராகவும் இருக்க முடியும்.


அப்படியான
ஒருவராக திகழ்ந்தவர் தோனி.


உள்ளுணர்வை
மதியுங்கள்


பெரும்பாலும்
தலைவர்கள் தங்கள் முடிவை வழிகாட்டிகளின் அறிவுரைகள், இதனால் வரை திரட்டப்பட்ட தரவுகளை
அடிப்படையாக கொண்டே ஒரு முடிவை எடுப்பார்கள். ஆனாலும் கூட தன்னுடைய உள்ளுணர்வை
உறுதியாக நம்ப வேண்டும். ஒரு அசலான தலைவனுக்கே இது சாத்தியம்.


சாம்பியன்
லீக் இறுதி போட்டியில் ஒரு ஓவர் மிச்சம் இருந்த வேளையில் பந்து வீச வேண்டிய உமேஷ்
யாதவ் என்ற வீரருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை பந்து வீச பணித்தார் தோனி. அணி
வெற்றி பெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் அத்தருணத்தில் தன் உள்ளுணர்வு
சொன்னதை பின்பற்றியதாக சொன்னார்.


ஒரு
தலைவனின் முடிவு அவனுடைய சுய ஞானத்திலிருந்து, அனுபவத்திலிருந்து பிறக்குமே அன்றி
வேறு எங்கிருந்தும் அல்ல.


தோல்வியை
கையாள்தல்


உலக
கோப்பை வெற்றிக்கு பின்பாக சில தொடர் தோல்விகளை சந்தித்தது இந்திய அணி. வெற்றியை
எந்த விதத்தில் அணுகினாரோ அதே விதத்தில் தோல்வியை அணுகியதே இவரின் தனித்தன்மை. அனைத்து
விமர்சனங்களை, கேள்விகளை ஒரு வெற்றியாளன்
எப்படி கையாள்வானோ அதே தொனியில் கையாண்டர்.


தோல்வியையும்
வெற்றிக்கு இணையாக ஏற்று கொண்டு அதை கையாள்கிற அந்த
கம்பீரம் தோனியின் தனித்துவம். அது ஓர் சிறந்த கற்றலும் கூட.


குழுவின்
மீதான நம்பிக்கை


தன்
குழுவின் மீது அலாதியான நம்பிக்கை கொண்டவர். ஒவ்வொறுவரின் ஆற்றலை முழுமையாக
வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கியவர். இது தாம் சிறப்பாக செயல்பட வேண்டும்
என்கிற பொருப்புணர்வை கூட்டி அவர்களின் முழுத்திறனையும் வெளிக்கொணர் ஏதுவாக
அமைந்தது.


வெற்றியை
பகிர்தல்


தோல்விக்கான
முழு பொறுப்பை தான் ஏற்று வெற்றிக்கான முழு பொறுப்பை குழுவுடன் பகிர்ந்து கொள்கிற
எவரும் தலைசிறந்த தலைவர்களே...


தோனி
தலைச்சிறந்த தலைவர்.


Next Story