Kathir News
Begin typing your search above and press return to search.

மராட்டியத்தில் சிவசேனா உடைகிறது, ஆட்சி கவிழ்கிறது - தாமரை மலர்கிறது??

மராட்டியத்தில் சிவசேனா உடைகிறது, ஆட்சி கவிழ்கிறது - தாமரை மலர்கிறது??

மராட்டியத்தில் சிவசேனா உடைகிறது, ஆட்சி கவிழ்கிறது - தாமரை மலர்கிறது??

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jan 2020 2:46 AM GMT


மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.க, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் அங்கு பா.ஜ.க – சிவசேனா கூட்டணி அரசு அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.


ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. எடுத்த எடுப்பிலேயே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வர் ஆக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் 50 சதவீத அமைச்சர்களையும் சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.


அனுபவம் எதும் இல்லாத 29 வயது ஆதித்ய தாக்கரேவை மிகப்பெரிய மாநிலமான மகராஷ்டிராவிற்கு முதல்வர் ஆக்குவதில் பா.ஜ.க-விற்கு உடன்பாடில்லை. மக்களும் இதை விரும்பவில்லை. மேலும் பா.ஜ.க வென்ற 105 இடங்களில், பாதி இடங்களை கைப்பற்றிய (56 இடங்கள்) சிவ சேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதே அதிகம்தானே? இருந்தாலும், இதையும் தாண்டி சிவ சேனாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்க பாஜக முன்வந்தது.


ஆனால் தன் மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தே தீர வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே விடாபிடியாக இருந்தார். பதவி வெறியால் அவரை தங்களின் பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடக்கிறது.


இந்த நிலையில் மராட்டியத்தில் சில நாட்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் தரவில்லை அதனால் காங்கிரசார் புனேயில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பிரித்து மேய்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 19 காங்கிரசார் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்க்ராம் தோப்டேக்கு ஆதரவாக, பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அதனால் காங்கிரஸ் அங்கு உடையும் சூழ்நிலையில் உள்ளது.


முதல்வர் பதவிக்காக தனது கட்சியை தேசியவாத காங்கிரஸிடம் அடகு வைத்து விட்டார் என முதல்வர் உத்தவ் தாக்கரே மீது சிவ சேனா மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முக்கிய அமைச்சர்களை எல்லாம் முதல்வர் பதவிக்காக தேசியவாத காங்கிரஸிடம் விற்று விட்டார் எனவும் பேச்சு எழுந்துள்ளது.


சிவ சேனாவின் 56 எம்.எல்.ஏக்களில் 13 எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸிலும் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் விழி பிதுங்கி நிற்கிறார் உதவி தாக்கரே. அது போல் அமைச்சர் நிதின் கட்கரியுடன் சிவ சேனாவின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளார்கள். இது மேலும் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவை போல் விரைவில் மராட்டியத்தில் தாமரை மலரும் என்கிறது மராட்டிய பா.ஜ.க!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News