Top
undefined
Begin typing your search above and press return to search.

தஞ்சை, நாகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை காலி செய்தது பா.ஜ.க! 15 வார்டுகளை கைப்பற்றி சாதனை!

தஞ்சை, நாகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை காலி செய்தது பா.ஜ.க! 15 வார்டுகளை கைப்பற்றி சாதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Jan 2020 7:05 AM GMT


தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடந்த ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை பின்னுக்கு தள்ளி, பாஜக முதலிடம் பிடித்துள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் போட்டியிட்ட 36 இடங்களில் 15 வார்டுகளை பாஜக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. இதில் 7 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதே மாவட்டத்தில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோல சிபிஎம் ஒரு இடத்திலும், சிபிஐ 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை பாஜக காலி செய்து முன்னேறி உள்ளது.


இதேபோல நாகப்பட்டினத்தில் பாஜக 8 இடங்களிலும், சிபிஎம் ஒரு இடத்திலும், சிபிஐ 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது. இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் பாஜக 4 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.


இதுதவிர, நாககையில் மாவட்ட கவுன்சிலர் ஒன்றையும் பாஜக கைப்பற்றி உள்ளது.


தஞ்சை, நாகை மாவட்டங்களில் மொத்தம் 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகளை பாஜக கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளது. அதேநேரம் அங்கு ஏற்கனவே வலுவாக இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் கரைந்து போய் உள்ளது.


தஞ்சை, நாகையில் பாஜகவின் வளர்ச்சி தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story