Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய & மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எச்சரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்!

மத்திய & மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எச்சரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்!

மத்திய & மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எச்சரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Jan 2020 4:28 AM GMT


பாரதீய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக 03/01/2020 அன்று மாலை 5 மணிக்கு எச்சரிக்கை நாள் கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது. சங்கர சுப்பிரமணியன், அகில பாரத பொறுப்பாளர் (மீனவர், எஸ்டேட் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் அருள் மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வ குமார், மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் பதிவு பெற்ற சங்கங்களின் பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். பாரதத்தின் முதன்மை சங்கமான BMS சங்கமானது மத்திய அரசு எடுத்து வருகிற தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தொழிலாளர்களின் பெரும்பலத்துடன் எதிர்த்து வருகிறது. பொதுத்துறை தனியார்மயம் மற்றும் பங்கு விற்பனை, அந்நிய முதலீடுகள் போன்ற கொள்கை முடிவுகளை உடனடியாக செயல்படுத்த முனையும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை BMS சங்கமானது தொடர்ந்து நடத்தி வருகிறது.



மத்திய & மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எச்சரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்!


அதன் தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே! தனியார்மயமாக்காதே! நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்திடு! அந்நிய நேரடி முதலீடுகளை கட்டுப்படுத்திடு! போக்குவரத்து கழகம் மற்றும் மின்சார வாரியங்களை தனியார்மயப்படுத்தாதே! RAILWAY AND DEFENCE தளவாட நிறுவனங்களை கார்ப்பரேட் மயப்படுத்தாதே! BANKING AND INSURANCE துறைகளை இணைக்கும் நடவடிக்கைகளை நிறுத்திடு! அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் சம்பள பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்கி முடிவு செய்திடு! அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையான சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை அளித்திடு! BSNL & MTNL தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷனை திருத்தி சரி செய்திடு! கணக்கீட்டு முறையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்திடு! நிரந்தர பணியிடங்களில் 5 வருடம் பணி செய்யும் காண்ட்ராக்ட் மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடு! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான கண்காணிப்பு குழுவில் BMS-யை இணைத்திடு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்திடு! போன்ற 31 வகையான தொழிலாளர் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி 03/01/2020 அன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் சேலம் மாவட்ட BMS சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News