Top
undefined
Begin typing your search above and press return to search.

கன்னட அமைப்புகள் போராட்டம்; தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் போலீஸ் குவிப்பு!

கன்னட அமைப்புகள் போராட்டம்; தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் போலீஸ் குவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2020 5:17 AM GMT


கர்நாடக மாநிலத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர், அவர்கள் சென்ற வானில் கர்நாடக  மாநிலத்தின் பெரிய கொடி ஒன்று கட்டப்பட்டிருந்தது, கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வந்த போது போலீசார் வழிமறித்து வேனில் கொடியை கட்டி சென்றால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது எனக்கூறி கர்நாடக மாநில கொடியை அகற்றியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேன் டிரைவர் ஆவேசத்துடன் முகநூல் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டார் அந்த வீடியோவில் என்னை கிருஷ்ணகிரி போலீசார் என்னை தாக்கியதாகவும் நமது மாநிலத்தின் கொடியை அகற்றி விட்டதாகவும் பதிவேற்றி உள்ளார்,அந்த வீடியோ கர்நாடகா மாநிலத்தில் வைரல் ஆனது. 



இந்தநிலையில் நேற்று தமிழக போலீசாரை கண்டித்து கன்னட ஜாக்ருதி வேதிகே, கர்நாடக ரக்‌‌ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் கர்நாடக மாநில கொடியை கட்டியவாறு தமிழக எல்லையான கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடிக்குள் நுழைய உள்ளதாக இரு மாநில போலீசாருக்கும் தகவல் கிடைத்தது,இதையடுத்து, தமிழக போலீசார், தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி அருகிலும், கர்நாடக போலீசார் அத்திப்பள்ளி எல்லையிலும் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் கன்னட அமைப்பினர் கார்கள், ஆட்டோக்கள், மோட்டார்சைக்கிள்களில் கர்நாடக மாநில கொடியை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.



மேலும் தமிழக போலீசாரை கண்டித்து கோ‌‌ஷங்களும் எழுப்பியும், கர்நாடக பக்தர்களை தாக்கிய போலீசார் மற்றும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்,இந்த சம்பவம் காரணமாக மாநில எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது, மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story