Top
undefined
Begin typing your search above and press return to search.

யார் இந்த குப்புராமு?

யார் இந்த குப்புராமு?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2020 12:57 PM GMT


யார் இந்த குப்புராமு? – இந்த கேள்விதான் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.


குப்புராமு, ஆர்.எஸ்.எஸ் என்கின்ற தேச சக்திக்காக, தன் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டவர். 1984-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் என்னும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் இணைந்து சாதரண தொண்டனாக தனது பயணத்தை தொடங்கினார்.


திராவிட இயக்கங்களில் இணைய உறவினர்கள் அழைத்தும், அவற்றை மறுத்து இந்துத்துவா சிந்தனைகளை தன் கொள்கையாக கொண்ட குப்புராமுவை, இராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் மற்றும் மூத்த சங்க சாலாக் மானனீய ஸ்ரீ.ஆத்மநாத சாமி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அழைத்து வந்தார்.


ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் கட்நாயக், ஷாகா முக்கிய ஷிக்ஷாக் கார்யவாஹ், ஸ்தல பிரமூக் கார்யவாஹ், ஜில்லா கார்யவாஹ், ஜில்லா சங்க சாலாக், சக பிராந்த சங்க சாலாக், தட்ஷின் தமிழ்நாடு என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.


ஆர்.எஸ்.எஸ் தந்த கிருஷ்ணப்பா, சூரிய நாரயண ராவ், சண்முகநாதன், ரெங்கசாமி தேவர், இல.கணேசன், RVS மாரிமுத்து ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். அவர்களால் வழிநடத்தப்பட்டார்.


இராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு திசைகளிலுள்ள ஊர்களில் இவர் கால்தடம் படாத ஊர்களோ, வீதிகளோ இல்லை என்னும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக அடித்தளம் அமைத்தவர்.


பரிவார் அமைப்புகளுக்காவும், ஏழை இந்துக்களுக்காவும் பல்வேறு வழக்குகளில் வாதாடி நீதி பெற்று தந்தவர். சாதாரண தொண்டனுக்கு கோர்ட் கேஸ்களில் பணம் பெறாமல் வாதாடி, பாதுகாத்து வருபவர்.


இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதி மோதல், இஸ்லாமிய மதமாற்றம், அடிப்படைவாதம், கிருஷ்தவ மிஷனரிகள், தேச விரோத, சமூக விரோத செயல்களை எதிர்த்து நின்று களம் கண்டு அவற்றை தடுத்து நிறுத்தியவர்.


24 கிராமங்களை மதம் மாற்ற திட்டமிட்ட மதமாற்ற கும்பலின் சதியை ஒற்றை ஆளாக நின்று முறியடித்தவர்.


அன்னிய சக்திகளின் பல பேரத்திற்கும், கொலைமிரட்டலுக்கும் அஞ்சாமல் சேது சமுத்திர திட்டத்தை தடுத்தவர். திமுக வை கடுமையாக எச்சரித்து அனுப்பியவர்.


ஐ.எஸ்.ஐ, பாகிஸ்தானின் ஆதரவுடன் முஸ்லீம் அடிப்படைவாதிகள் ஒரு லட்சம் ஹரிஜன இந்துக்களை, முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் இலக்கு கொண்ட பகுதி இராமநாதபுரம். குப்புராமுவின் தீவிர முயற்சியால் அது பெருமளவு தடுக்கப்பட்டது. அவர்களால் சில ஆயிரம்பேர்களை மட்டுமே மதமாற்றம் செய்ய முடிந்தது.


முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பினர், தங்களால் நினைத்தபடி மதமாற்ற திட்டத்தை அரங்கேற்ற குப்புராமு தடையாக இருந்ததால், அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி கொலைவெறி தாக்குதல் நடந்த்தியதினர். வெட்டுபட்டார் ஆனால் வீழ்ந்துவிடவில்லை.


கடவுளின் அருளால் இந்து தர்மத்தை காப்பாற்ற உயிர்பிழைத்தார். ஒரு வருட தீவிர சிகிச்சைக்கு பின், ஆர்.எஸ்.எஸ் பணியை தொடர்தார்.


1986-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்ந்தவர். அதன் மூலம் பட்டணம்காத்தான் பஞ்சாயத்தை முதல் தரத்திற்கு உயர்த்தியவர்.


தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திமுக கருணாநிதி ஆட்சியில் தேர்வு பெற்ற ஓரே ஆர்.எஸ்.எஸ்காரர் குப்புராமு.


வழக்கறிஞரான இவர், 2006-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் ராம சேது பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி, ராம சேதுவை காக்க போராடினார்.


2007-ஆம் ஆண்டில் இவரின் முயற்சி காரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ராம சேது பிரச்சினை தேசிய வெளியீடாகவும், முக்கியமாகவும் மாறியது . சிவில் வழக்கு தாக்கல் செய்தார். இராமநாதபுரம் மாவட்டநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார்.


சட்ட காவலர்கள் வழக்கறிஞர் ராமஜென்ம பூமி காவலர் பராசரன், வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், சோலிசோராப்ஜி, ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி, முன்னாள் மாண்புமிகு மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, அதிவக்த பரிஷத் தலைமையுடன் வழக்கறிஞர் திரு. பூபேந்தர் யாதவ் (இப்போது, அகில இந்திய பொதுச் செயலாளர் பாஜக) மற்றும் வழக்கறிஞர் பரத்குமார் (உச்சநீதி மன்றம்) ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.


மீனவர்கள் பிரச்சினைகளை களத்தில் நின்று களைந்து அவர்களின் அன்பிற்கு இலக்கணமானவர். 13 மாவட்ட மீனவர்களின் பாதுகாவலராக திகழ்ந்து வருபவர். அவர்களின் அன்பிற்கு பாத்திரமானவர்.


வாழும் தேவரய்யா என ராமநாதபுர மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர். சுனாமி பாதிப்புகளின் போது சேவா பாரதி மூலமாக மூன்று மாத காலம் மீட்புபணிகளில் முழுவதுமாய் அங்கயே தங்கி இருந்து வெற்றிகரமாக முடித்து திரும்பியவர்.


கடந்த 37 வருடகாலங்களாக இந்து இயக்கங்களுக்காவும், மக்களுக்காவும் தொடர்ந்து போராடி வருபவர் குப்புராமு .


இவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரர். நேர்மையே தன் பலம் என நெஞ்சை நிமிர்த்தி நிற்பவர். ஊடக வெளிச்சத்தை விரும்பாதவர். எதிலும் சமரசம் செய்யாதவர். தொண்டனின் குறைகளை களைபவர். எளிமையானவர். வழக்கறிஞர். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.


இவர் வகித்த முக்கிய பொறுப்புகள்,


1. மாநில தலைவர்,


விஷ்வ ஹிந்து பரிஷத்.


(2011-2014).


2.மாநில துணைத்தலைவர் ,


RSS (ராஷ்டீய ஸ்வயம் சேவாக் சங்கம்)


(1997- 2014).


3.மாநில தலைவர்,


தமிழ்நாடு ஊராட்சி மன்ற


கூட்டமைப்பு சங்கம் .


(1986-2006)


4.மாநில தலைவர்


பாரதிய மீனவர் சங்கம்,


தமிழ்நாடு.


5.நிறுவனர் & அகில பாரத செயலாளர்,


ராமசேது பாதுகாப்பு இயக்கம், இந்தியா.


Next Story