Top
undefined
Begin typing your search above and press return to search.

யாருடைய பாதையில் செல்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி? சட்டசபையில் கவர்னர் பெருமையுடன் பேச்சு!

யாருடைய பாதையில் செல்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி? சட்டசபையில் கவர்னர் பெருமையுடன் பேச்சு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2020 9:07 AM GMT



தமிழக சட்டசபையின் இந்த புது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று திங்கட்கிழமை தொடங்கியது.


தொடரின் முதல் நாளான இன்று பேரவையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம் போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதுடன், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு:-


காவேரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றும் என்றார். மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேலும் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்திருந்தாலும் திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது என்றார்.


காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்றும் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்றார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த அதே பாதையில் ஆட்சியை தொடர்கி றார். தமிழகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக் காகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுவதாகவும் கூறினார். மேலும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 18 பெரிய மாநிலங்களுள் தமிழகம் அரசு நிர்வாகத்தில் முதலிடம் பிடித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம் என்றார்.


'இந்தியா டுடே' ஆய்விலும் தமிழக அரசு முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது என்றும் இந்த சாதனைகளுக்காக முதல்வர் பழனிசாமியை வாழ்த்துவதாகவும் கூறினார்.


ஜனநாயகத்தை அமேலும் வலுப்படுத்தும் வகையில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் மற்ற 9 மாவட்டங்களுக்கும், நகராட்சிகளுக்குமான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். என்றார் கவர்னர் பன்வாரிலால் புரோகித்.


Next Story