Top
undefined
Begin typing your search above and press return to search.

மாதவரம் – சிறுசேரி 2 - ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: தரமணி வரையிலான சுரங்கப்பாதை பணி ஜூன் மாதம் தொடங்குகிறது!

மாதவரம் – சிறுசேரி 2 - ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: தரமணி வரையிலான சுரங்கப்பாதை பணி ஜூன் மாதம் தொடங்குகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Jan 2020 12:40 PM GMT


மாதவரம் – சிறுசேரி 2- ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு கட்ட பணியாக மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது என்றும் இதற்கான ராட்ஷச போரிங் எந்திரங்கள் சென்னைக்கு மீண்டும் கொண்டு வரப்படுவதாகவும் மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தற்போது மீனம்பாக்கம் விமானநிலையம் முதல் சென்னை சென்ட்ரல் வரை இரு வழி தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த முதல் திட்டம் போக மாதவரம் – சிறுசேரி இடையே 2-ம் கட்ட மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர் உள்பட மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 118.9 கி.மீ. தொலைவு தூரத்துக்கு ரூ. 85 ஆயிரத்து 47 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ. தொலைவுக்காக மெட்ரோ ரெயில் திட்டத்தில் கட்டுமான பணிக்காக இப்போது டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்குள் காண்டிராக்டர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் அதன் பிறகு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் ஜூன் மாதம் மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்குவதாக கூறினார்.


மேலும் மாதவரத்தில் இருந்து கெல்லீஸ் வரை 9 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வழித்தடத்திலும், கெல்லீசில் இருந்து தரமணி வரை 12 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு வழித்தடத்திலும் சுரங்கப் பாதை பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் இதற்கான போரிங் எந்திரங்கள் சென்னைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன எனவும் அதிகாரிகள் கூறினர்.


Next Story