Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Jan 2020 6:49 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுற்றுலாவுக்கு மிக முக்கியத்துவம் அளித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே உலகத் தலைவர்கள் வரும்போது பல மாநிலங்களில் சந்திப்புகளை ஏற்படுத்தி இந்திய சுற்றுலாவை மேம்படுத்த பல நடவடிக்கைகள் சுற்றுலாத் துறையும் மத்திய அரசு எடுத்து வருகிறது இந்நிலையில்பிரதமர் மோடி அரசின் கீழ் சுற்றுலா இது வரை இல்லாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சுற்றுலா மற்றும் சுற்றுலா போட்டித்திறனில் இந்தியா 2013 இல் 65 வது இடத்தில் இருந்தது,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, நவம்பா் மாதம் வரையிலுமான காலகட்டத்தில் 3.23 சதவிகிதம் அளவில் அதிகரித்து இருக்கின்றது, 65வது இடத்தில் இருந்த இந்தியா சுற்றுலாத்துறை தற்போது 2019 இல் 34 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.



2019ஆம் ஆண்டு மட்டும் 96.69 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர், அந்நிய செலாவணி வருமானம் ரூ .1.88 லட்சம் கோடி கிடைத்துள்ளது என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு  விசா வழங்குவதில் எளிதான வழிமுறைகள், ஜி.எஸ்.டி., குறைப்பு போன்றவை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க காரணம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்,மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது 2019 சுதந்திர தின உரையில் இந்தியர்கள் 2022க்குள் இந்தியாவுக்குள் இருக்கின்ற 15 சுற்றுலா இடங்களுக்கு சென்று வர வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story