Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகப்போரை தடுக்கும் சக்தி இந்தியாவிடமா.? வல்லரசை நோக்கி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்த பிரதமர் மோடி : இறங்கி வரும் ஈரான்.!

உலகப்போரை தடுக்கும் சக்தி இந்தியாவிடமா.? வல்லரசை நோக்கி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்த பிரதமர் மோடி : இறங்கி வரும் ஈரான்.!

MuruganandhamBy : Muruganandham

  |  8 Jan 2020 12:32 PM GMT


அமெரிக்காவுடனான பதற்றமான சூழலை தணிப்பதற்கு, இந்தியாவின் சமாதான முயற்சியை ஈரான் வரவேற்பதாக அந்நாட்டு தூதர் தெரிவித்தார்.


உலகில் மற்ற நாடுகள் இரு பிரிவாக, பிரிந்து சண்டையிட்டு கொண்டாலும், நிலமை வகிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. பிரதமர் மோடியின் அலுவல் ரீதியான வெளிநாட்டு பயணங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கிடையில் இந்தியாவுடன் நல்லுறவு நீடித்து வருகிறது.


தற்போது ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் இந்தியாவின் உதவியை ஈரான் நாடியுள்ளது. இந்தியா சமாதானம் பேச அழைத்தால் அமெரிக்காவுடன் பேச தயாராக உள்ளது.


பதற்றமான சூழ்நிலையில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் சுலைமானிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,


உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்தியா இந்த பிராந்தியத்தில் உள்ளது. பதற்றங்கள் அதிகரிப்பதை அனுமதிக்காத அனைத்து நாடுகளிடம் இருந்தும், குறிப்பாக எங்களின் நல்ல நட்பு நாடான இந்தியாவிடம் இருந்து, அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.


நாங்கள் போரை விரும்பவில்லை. இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அமைதி மற்றும் செழிப்பை எதிர்பார்க்கிறோம். இந்த உலகில் அமைதி மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில், இந்தியாவின் எந்தவொரு சமாதான முயற்சி அல்லது திட்டமாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story