Top
undefined
Begin typing your search above and press return to search.

நாளை காலை அறிக்கை தயாராகும் - ஈரான் பதிலடி தாக்குதலுக்கு, உலகை அதிர வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..!

நாளை காலை அறிக்கை தயாராகும் - ஈரான் பதிலடி தாக்குதலுக்கு, உலகை அதிர வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..!

MuruganandhamBy : Muruganandham

  |  8 Jan 2020 6:51 AM GMT


ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய வீடியோவும்  வெளியாகி உள்ளது.


ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.


மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சூழலில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஈரான் ராணுவத்தை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்த நிலையில், அல் அசாத் பகுதியில் இருந்த படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.


ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு "Martyr Soleimani" என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஏவுகணைத் தாக்குதல்கள் முதல் படியாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது துருப்புக்களை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெறுவது குறித்து சிந்திக்க வேண்டும். அவர்களை எங்களது எல்லைக்குள் விட்டுவிடக்கூடாது என்று ஈரானிய அரசு தெரிவித்துள்ளது.


ஐ.நா. சாசனத்தின் 51 வது பிரிவின் கீழ் தற்காப்புக்கான விகிதாசார நடவடிக்கைகளை ஈரான் எடுத்து முடித்தது. நமது குடிமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் ஆக்கிரமிப்பு அல்லது போரை தேடி போவதில்லை. ஆனால் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக தற்காத்துக் கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/FarsNews_Agency/status/1214681636153020416




https://twitter.com/AFP/status/1214737122105552896


இதற்க்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எல்லாம் நன்றாக இருக்கிறது! ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு இராணுவ தளங்களில் ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இப்போது நிகழும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் மதிப்பீடு அறியப்பட்டுள்ளது. உலகில் எங்கும் மிக சக்திவாய்ந்த மற்றும் நன்கு ஆயுதம் தாங்கிய இராணுவம் எங்களிடம் உள்ளது! நாளை காலை ஒரு அறிக்கையை வெளியிடுவேன்" என்று கூறியுள்ளார்.




https://twitter.com/realDonaldTrump/status/1214739853025394693

Next Story