Kathir News
Begin typing your search above and press return to search.

வாய் சவடால் மன்னன் சீமான் கட்சிக்கு திருச்சி பகுதியில் ஒரே ஒரு ஓட்டு! காறி துப்பும் நெட்டிசன்கள்!

வாய் சவடால் மன்னன் சீமான் கட்சிக்கு திருச்சி பகுதியில் ஒரே ஒரு ஓட்டு! காறி துப்பும் நெட்டிசன்கள்!

வாய் சவடால் மன்னன் சீமான் கட்சிக்கு திருச்சி பகுதியில் ஒரே ஒரு ஓட்டு! காறி துப்பும் நெட்டிசன்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jan 2020 6:54 AM GMT



தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளாக வெறுப்பு அரசியல், பிரிவினைவாதம், தனிப்பட்ட நபர்கள் மீதான விமர்சனம், ஒழுங்கின்றி பேசுதல், மேடை நாகரீகங்களை மீறுதல், முன்னுக்கு பின்னாக உளறுதல், தொண்டர்களிடம் முரண்படுதல், பொய்பேசி தவறான தகவல்களை கூட்டத்தினருக்கு அளித்தல் போன்ற செயல்கள் மூலம் அரசியல் பித்தலாட்டம் செய்து வரும் சீமானுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சி ஊரக தேர்தலில் கிராமப்புற மக்கள் அதுவும் தென்னக மக்கள் சரியான ‘ரிவிட்’ அடித்து விட்டதாக தென்னகத்திலிருந்து வெளி வரும் பத்திரிக்கைகளும், நெட்டின்களும் கலாய்த்து வருகின்றனர்.


சமீபத்தில் தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.


இதில் அதிமுகவை விட திமுக கட்சி சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டு கவுன்சிலராக நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட சுனில் மிக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் சுயேட்சையாக களம் இறங்கிய நிலையில் கடைசி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை அக்கட்சியினர் வேறு வழியில்லாமல் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் 10 வருடமாக உள்ள கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் வெற்றியை கொண்டாடி வருவதை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அரசியல் எந்த அளவுக்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதற்கு திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதில் இருந்து தெரிகிறது என்றும் ஒரே ஒரு ஓட்டு என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 முதல் 50 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இது சீமான் கடைபிடிக்கும் அருவருப்பான பேச்சுக்கள், சிந்தனைகளுக்கு கிடைத்துள்ள பரிசு எனவும் கலாய்த்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News